ஹோம் /நியூஸ் /உலகம் /

சிறுமிகளுக்கு ஆதரவாக பள்ளியை புறக்கணிக்கும் ஆப்கானிஸ்தான் சிறுவர்கள்!

சிறுமிகளுக்கு ஆதரவாக பள்ளியை புறக்கணிக்கும் ஆப்கானிஸ்தான் சிறுவர்கள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு காலையிலும் ஆண்களுக்கு மதியம் வகுப்புகள் நடத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவிகளுக்கு ஆசிரியைகளும் மாணவர்களுக்கு ஆசிரியர்களும் வகுப்புகளை எடுக்கும் விதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பெண்களுக்கான பள்ளிகள் திறப்பில் மர்மம் நீடிக்கிறது. பெண்கள் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளிக்கு செல்வதை ஒருசில இடங்களில்  சிறுவர்கள் புறக்கணித்துள்ளனர்.

  ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. கடந்த தாலிபான் ஆட்சியில் பெண்கள் கல்வி பயில அனுமதி மறுக்கப்பட்டது. தற்போதும் அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தங்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

  ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்ட நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே திரை வைத்து மறைக்கப்பட்டது.  இருபாலருக்கும் தனித் தனி வகுப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இந்த நிலை என்றால், பள்ளிகளிலோ இன்னும் மோசமாக உள்ளது.

  ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்க  தலிபான் கல்வி அமைச்சகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அனைத்து ஆண் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் வகுப்புகளுக்கு திரும்பலாம் என்று தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில்,  பெண்கள் பள்ளிகளைத் திறப்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

  பள்ளிகள் திறக்கப்பட்டு சிறுவர்கள் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் ஒருசில சிறுவர்கள் மாணவிகளுக்கு ஆதரவாக பள்ளிக்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர். ”பெண்கள் பாதி சமூகத்தை உருவாக்குகிறார்கள் . பெண்கள் பள்ளிகளும் திறக்கப்படும் வரை நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன்” என்று 18 வயது சிறுவன் ஒருவர் தெரிவித்ததாக வால் ஸ்டீரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

  இதையும் படிங்க: சுமையாவை நாங்களே கொன்றோம் – அமெரிக்கா ஒப்புதல்

  தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உள்ளூர் பக்தர் செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமையன்று அளித்த பேட்டியில்  பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். எனினும் எப்போது திறக்கப்படும் என்பதை அவர் கூறவில்லை.

  இதேபோல், ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு காபூலைச் சேந்த தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அளித்த பேட்டியில், “ பெண்களுக்கு காலையிலும் ஆண்களுக்கு மதியம் வகுப்புகள் நடத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவிகளுக்கு ஆசிரியைகளும் மாணவர்களுக்கு ஆசிரியர்களும் வகுப்புகளை எடுக்கும் விதம் மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  மேலும் படிக்க: மகளிர்நல அமைச்சகத்தையே கலைத்த தாலிபான்கள் - அட்ராசிட்டி ஆரம்பம்!

  ஆப்கானிஸ்தான் பெண்களின் கல்வி தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் கவலை தெரிவித்துள்ளது. மாணவிகள் உடனடியாக பள்ளிகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் அதற்கு முதலில் ஆசிரியைகள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்றும் ஐ.நா. சபை கூறியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Afghanistan, Girl students, Taliban