முகப்பு /செய்தி /உலகம் / ஒரே நேரத்தில் கொரோனா, மங்கிபாக்ஸ், எச்ஐவியால் பாதித்த நபர்; மருத்துவ உலகம் அதிர்ச்சி

ஒரே நேரத்தில் கொரோனா, மங்கிபாக்ஸ், எச்ஐவியால் பாதித்த நபர்; மருத்துவ உலகம் அதிர்ச்சி

இத்தாலி நபருக்கு ஒரே நேரத்தில் கோவிட்-19, மங்கிபாக்ஸ் மற்றும் எச்ஐவி பாதிப்பு

இத்தாலி நபருக்கு ஒரே நேரத்தில் கோவிட்-19, மங்கிபாக்ஸ் மற்றும் எச்ஐவி பாதிப்பு

பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கோவிட்-19 மற்றும் குரங்கம்மை பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaRomeRome

இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 பெருந்தொற்று, பின்னர் தற்போது மங்கிபாக்ஸ் தொற்று பரவல் என உலக நாடுகள் தொற்று பாதிப்பால் அவதி பட்டுவருகின்றன. இந்த சூழலில், இத்தாலி நாட்டில் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் மங்கிபாக்ஸ், கோவிட்-19 மற்றும் எச்ஐவி ஆகிய பாதிப்புகள் பதிவான அதிர்ச்சிக்குரிய செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நபரின் பெயரை குறிப்பிடாமல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதிப்புக்குள்ளான நபர் இந்தாண்டு ஜூன் மாதம் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அவர் நாடு திரும்பியதும் உடல் நலக் குறைவு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரிய வந்ததது.

இதைத் தொடர்ந்து சில நாள்களுக்குப் பின் அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் கூடிய வகையில் உடலில் புண்கள் தென்படத் தொடங்கின.இதைத் தொடர்ந்து அந்நாட்டின் காடானியா பகுதியில் உள்ள சான் மார்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற பரிசோதனையில் இவருக்கு குரங்கம்மை மற்றும் எச்ஐவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவு இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவருக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கோவிட்-19 மற்றும் குரங்கம்மை பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இந்த நபர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மற்றொரு ஆண் உடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஒத்துக்கொண்டார். ஆனால் அந்த ஸ்பெயின் நாட்டு நபருக்கு எச்ஐவி தொற்று ஏதும் இல்லை எனவும் பாதிப்புக்கு ஆளான இத்தாலி நாட்டு நபர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வைரலான டான்ஸ் வீடியோ.. போதைப்பொருள் பயன்படுத்தினாரா பின்லாந்து பிரதமர்? ஆய்வில் தெரியவந்த தகவல்

இந்த கேஸ் ஆனது, மங்கிபாக்ஸ் மற்றும் கோவிட்-19 ஆகிய இரு தொற்றுக்கான பதிப்பு அறிகுறிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும் என்பதை மருத்துவ உலகின் ஆய்வுக்கு அறிமுகம் செய்துள்ளதாக மருத்துவமனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Covid-19, HIV, Monkeypox