முகப்பு /செய்தி /உலகம் / உடலில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை... மருத்துவர்கள் ஆச்சரியம்!

உடலில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை... மருத்துவர்கள் ஆச்சரியம்!

வாலுடன் பிறந்த குழந்தை

வாலுடன் பிறந்த குழந்தை

பிரேசில் நாட்டில் அரிய நிகழ்வாக 6 செமீ நீள வாலுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaBrasiliaBrasilia

உலகில் பிறக்கும் சில குழந்தைகள் வித்திசாயமான அம்சங்கள் தோற்றங்களுடன் பிறக்கும். டிஎன்ஏ தன்மை, ஜெனிட்டிக் காரணி போன்ற பல்வேறு அறிவியல் காரணங்களை மருத்துவ தெரிவிக்கின்றன. அப்படிதான் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ பகுதியில் ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் ஒரு பெண் குழந்தையை பிரசவித்த நிலையில், அந்த குழந்தை வாலுடன் பிறந்துள்ளது. இது பார்த்து ஆச்சரியமடைந்த மருத்துவர்கள், உடனடியாக பரிசோதனையில் இறங்கினர். இந்த வால் பகுதி சுமார் 6 செமீ நீளம் இருந்த நிலையில், அந்த வாலில் ஏதும் அசைவுகள் இல்லை. அதேவேளை அதில் உணர்ச்சிகள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது போன்ற தோற்றத்திற்கு ஸ்பைனா பிஃபிடா (spina bifida) என்ற மருத்துவ பெயர் உள்ளது.

முதுகுத்தண்டு வளர்ச்சியில் குறைபாடு இருக்கும்போது தான் இது போன்ற வாலுடன் குழந்தை பிறக்கும் எனவும், இது ஒரு அரிதான மருத்துவ சூழல் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த வால் பகுதி அகற்றப்பட்டது.

அந்த வால் பகுதி இருந்த இடத்தில் சதை வைத்து மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையை முடித்து வைத்தனர்.தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் அரிதான நிகழ்வு, இதுவரை 200 சுமார் பேர் இது போன்ற வாலுடன் பிறந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Brazil