லாகூர் சஃபாரி உயிரியல் பூங்காவில் உள்ள நிர்வாகம் அதன் ஆப்பிரிக்க சிங்கங்களில் சிலவற்றை விற்க திட்டமிட்டுள்ளது. ஒரு சிங்கம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் PKR 1,50,000 (இந்திய மதிப்பில் ரூ. 50,000) என்ற விலையில் விற்கத் தயாராக உள்ளது என்று பாகிஸ்தானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஆன்லைன் சந்தையில் ஒரு எருமை பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 350,000 (இந்திய மதிப்பில் ரூ 1.17 லட்சம்) முதல் 1 மில்லியன் ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ 3.35 லட்சம்) வரை கிடைக்கிறது.
லாகூர் சஃபாரி உயிரியல் பூங்கா நிதிப்பற்றாக்குறையில் செயல்பட்டு வருகிறது.மிருகக்காட்சிசாலையில் விலங்குகளை பராமரிக்கும் செலவு மற்றும் இதர செலவுகளை சமாளிக்க போதுமான நிதி அவர்களிடம் இல்லை. நன்கொடையாக மட்டுமே நிதி திரட்ட முடியாது என்பதனால் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
நேபாளத்தில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் வருகிறது?
அந்த வகையில் சிங்கங்களை விற்க உயிரியல் பூங்கா அதிகாரிகள் முடிவு செய்தனர். மூன்று சிங்கங்கள் உட்பட காட்டுப் பூனைகள் சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. அவற்றை தான் இப்பொது விற்பனை செய்ய உள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் 12 சிங்கங்களை விற்பனை செய்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. சிங்கங்களை தனியார் நபர்களுக்கும்,கால்நடை வளர்ப்பு ஆர்வலர்களுக்கும் பிரீமியம் முறையில் விற்பனை செய்யப்படும் என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரு காட்டுப் பூனை வகை உயிரினத்தைப் பராமரிப்பு என்பது மிகவும் கடினமானது மட்டுமல்ல, விலை உயர்ந்ததும் கூட. சிங்கங்கள் ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பது கிலோ இறைச்சியை உண்கின்றன. இதனால் சிங்கங்களை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிப்பது என்பது சிரமமாக உள்ளது. அவ்வளவு வசதி இங்கில்லை. அதனால் தான் அதன் வளர்ச்சிக்கு விற்கிறோம் என்கின்றனர்.
கடந்த ஆண்டு சஃபாரி மிருகக்காட்சிசாலையில் குறைந்த இடவசதியைக் காரணம் காட்டி குடிமக்களுக்கு 14 சிங்கங்கள் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு எருமையின் விலையை விட உயிரியல் பூங்காவின் சிங்கத்தின் விற்பனை விலை குறைவாக இருப்பதனால் இது நெட்டிசன்கள் ஆச்சரியத்தையும் கவனத்தையும் பெற்றுவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.