ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒமைக்ரான் பேராபத்தை ஏற்படுத்தும் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒமைக்ரான் பேராபத்தை ஏற்படுத்தும் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

டெல்டா வேரியண்ட் வைரஸை காட்டிலும், 2 - 3 நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் இரட்டிப்பாக பரவும் தன்மை கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா வேரியண்ட் வைரஸை காட்டிலும், 2 - 3 நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் இரட்டிப்பாக பரவும் தன்மை கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா வேரியண்ட் வைரஸை காட்டிலும், 2 - 3 நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் இரட்டிப்பாக பரவும் தன்மை கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒமைக்ரான் மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

    கொரோன பாதிப்பில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக விடுபட்டு வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மீண்டும் பல நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

    Also Read : 3000 ஆண்டு பழமையான மம்மி உடலுக்கு உருவம்! தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அராய்ச்சியாளர்கள் முயற்சி

    கொரோனாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று பல்வேறு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனாவை விட அதிவேகமாக பரவும் ஆற்றல் ஒமைக்ரான் வைரசுக்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை

    குறிப்பாக டெல்டா வேரியண்ட் வைரஸை காட்டிலும், 2 - 3 நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் இரட்டிப்பாக பரவும் தன்மை கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வேகமாக பரவும் அதேநேரத்தில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைப் பாதித்து, உயிரிழப்பு வரை ஒமைக்ரான் வைரஸ் கொண்டு சென்றுவிடும். பிரிட்டன் மற்றும் தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    Also Read : குறைப்பிரசவமான பெண்ணுக்கு கோடிக்கணக்கில் வந்த மருத்துவமனை பில் - அமெரிக்காவில் அதிர்ச்சி!

    இதனடிப்படையில் டெல்டா வேரியன்ட்டை விட, ஒமைக்ரான் வைரஸ் சற்று லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் உதவி, உயிர்காக்கும் கருவிகளின் ஆதரவு உள்ளிட்டவை தேவைப்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

    இன்னும் சில ஆய்வுகள் நடத்தி முடிக்க பட்டால் மட்டுமே ஒமைக்ரேன் வைரஸின் தன்மையை முழுவதுமாக உறுதி செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் மட்டும் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பின்போதும் பலமுறை விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து துறைக்கு அடிமேல் அடி விழத் தொடங்கியுள்ளது.

    First published: