ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக மலேசிய பிரதமருடன் மோடி ஆலோசனை!

news18-tamil
Updated: September 6, 2019, 10:44 AM IST
ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக மலேசிய பிரதமருடன் மோடி ஆலோசனை!
மஹாதீர் முகம்மது | மோடி
news18-tamil
Updated: September 6, 2019, 10:44 AM IST
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது தொடர்பாக இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக, மலேசிய பிரதமர் மஹாதீர் முகமதுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார கூட்டமைபின் போது மலேசிய பிரதமர் மஹாதீர் முகமதுவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, மலேசியாவில் நிரந்திர குடியுரிமை பெற்றுள்ள ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் மேலதிக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என இந்திய வெளியுறவு செயலளார் விஜய் கோகலே தெரிவித்தார்.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மலேசியா இக்கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.


ஜாகிர் நாய்க்


"ஜாகிர் நாயக்கால் எந்தவிதப் பிரச்சனையும் எழாதவரை அவர் இங்கு தங்கி இருக்கலாம், என்று மலேசியப் பிரதமர் மகாதீர் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்

மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாகிர் நாயக், அங்குள்ள இந்திய, சீன வம்சாவளியினர் குறித்து தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை வெடித்தது. எனினும் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதில்லை என்ற மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மஹாதீர் முகமது மீண்டும் அறிவித்திருந்தார்.

Loading...

2016- ம் ஆண்டு பங்களாதேஷ் தலைநகர்டாக்காவின் புறநகரான குல்ஷன் கஞ்ச் பகுதியில், பேக்கரி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் சிலர், துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினரை சுட்டுக் கொன்ற அவர்கள், விடுதிகளில் தங்கியிருந்த 20 வெளிநாட்டுப் பயணிகளையும் கொன்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக ரோகன் என்பவரை, டாக்கா காவல்துறை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமிய மத போதகரின் பேச்சுக்களால் கவரப்பட்டவர், என்ற விபரம் வெளியானது.

இதை அடிப்படையாக வைத்து பங்களாதேஷ் அரசாங்கம், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஒளிபரப்பும் PEACE தொலைக்காட்சி மற்றும் ஜாகிர் நாயக்கின் வீடியோ உரைகள், இஸ்லாமிய செயலிகள், வால் பேப்பர்கள் அடங்கிய 'PEACE' செல்போன்களை தடை செய்தது. அத்துடன், இந்தியாவைச் சேர்ந்த ஜாகிர் நாயக் பற்றி இந்திய அரசாங்கம் விசாரிக்கவும் கண்காணிக்கவும் கோரிக்கை விடுத்தது.

இதனை தொடர்ந்து இந்தியாவில் ஜாகிர் நாயக் மீதான பிடி இறுகவே, அவர் மலேசியாவுக்கு தப்பிச் சென்றார். இஸ்லாமிய மதபோதகரான ஜாகிரின் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், இளைஞர்களை முளை சலவை செய்து பயங்கரவாதத்தின் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...