இம்ரான்கானை அவமதித்ததா அமெரிக்கா?

ஏற்கனவே அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர், சிந்து மாகாணத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேச வேண்டும் என ட்ரம்புக்கு கடிதம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 22, 2019, 9:22 AM IST
இம்ரான்கானை அவமதித்ததா அமெரிக்கா?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
Web Desk | news18
Updated: July 22, 2019, 9:22 AM IST
அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு அதிகாரிகள் யாரும், விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்காதது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 3 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அவர் திங்கட்கிழமையான இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசுகிறார்.

அப்போது பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து, ட்ரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர், சிந்து மாகாணத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேச வேண்டும் என ட்ரம்புக்கு கடிதம் அளித்துள்ளனர்.

இம்ரான்கானின் முதல் அமெரிக்க பயணத்தை பாகிஸ்தான் ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, சமூக வலைதளங்களில் அவரது பயணம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்லாமல், எளிமையான முறையில் பயணிகள் விமானத்திலேயே இம்ரான்கான் சென்றார். வாஷிங்டன் விமான நிலையத்தில் அவரை வரவேற்க அமெரிக்காவின் சார்பில் அதிகாரிகள் கூட யாரும் வரவில்லை.

மாறாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மட்டுமே அவரை வரவேற்றனர். பிடிஐ எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் அரசுமுறைப்படி இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

DEREK WILLIS என்ற பத்திரிகையாளர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் சரியாக விளையாடாததால், இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார்.மற்றொரு ட்விட்டர் பதிவர், இம்ரான்கானை வரவேற்பதில் எந்த மரபையும் அமெரிக்கா பின்பற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.மற்றொரு பதிவர் வெறுமனே ஹா ஹா ஹா ஹா என்று மட்டுமே கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இப்படி பல்வேறு கருத்துகள் இம்ரான்கானின் அமெரிக்க பயணம் குறித்து தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க... நிலவில் மனிதன் கால் பதித்ததன் பொன் விழா ஆண்டு - வரலாற்று நிகழ்வின் அரிய புகைப்படங்கள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...