ஹோம் /நியூஸ் /உலகம் /

இனி இப்படி பண்ணுவீங்க.. சிறுநீர் கழிப்பவர் மீதே திரும்பி அடிக்கும் சுவர்..

இனி இப்படி பண்ணுவீங்க.. சிறுநீர் கழிப்பவர் மீதே திரும்பி அடிக்கும் சுவர்..

சுவர்களில் சிறுநீர்..!

சுவர்களில் சிறுநீர்..!

ஒரு  சிறப்பு ஸ்ப்ரே-ஆன் ரசாயனத்தைப் பயன்படுத்தி வண்ணம் பூசியுள்ளனர். அவை உண்மையில் சுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று நம்புகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] |

'பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள்' என்ற பலகையை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பார்க்கலாம். கோவில் சுவர் தொடங்கி பள்ளி சுவர் வரை எல்லா இடங்களிலும் எழுதி இருக்கும். ஆனால் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதே இல்லை. அதை தடுக்க வகை வகையாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி லண்டனில் ஒரு புதிய முயற்சியை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய லண்டன் பகுதி இரவு நேர பார்ட்டிகளுக்கு பிரபலமானது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இடமாகவும் உள்ளது. இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மக்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சாலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்படி சிறுநீர் கழிப்பதைத் தடுக்க ஒரு புதிய முறையை கொண்டு வர  யோசனை செய்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு யோசனை வந்துள்ளது.

லண்டனில் உள்ள குறிப்பிட்ட உணவகங்கள், கிளப்கள், திரையரங்குகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் சுவர்களில் ஒரு  சிறப்பு ஸ்ப்ரே-ஆன் ரசாயனத்தைப் பயன்படுத்தி வண்ணம் பூசியுள்ளனர். அவை உண்மையில் சுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று நம்புகின்றனர். இது சுவரில் நீர் படியாமல் தடுப்பதோடு அதில் படும் நீரை தெறிக்கும் அம்சத்துடன் விளங்குகிறது. இதனால் இந்த பெயிண்ட் பூசப்பட்ட சுவர்களில் படும் சிறுநீர் சுவரில் பட்டு சிறுநீர் கழிப்பவர் மேலே தெறித்துவிடும் .

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சில் உள்ளூர் மக்களிடமிருந்து தொடர்ந்து சிறுநீர் தொடர்பான புகார்களைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை ஜெர்மனியில் உள்ள மற்றொரு நகரமும் பயன்படுத்தியுள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த சிறப்பு வகை பெயிண்ட் அடித்த சுவர்களில் "இந்தச் சுவர் சிறுநீர் கழிப்பிடம் இல்லை" என்ற செய்தியுடன் அறிவிப்பு பலகைகளை அமைக்கத் தொடங்கியுள்ளனர்,

தெருக்களை சுத்தம் செய்வதற்கு வெஸ்ட்மின்ஸ்டர் ஆண்டுக்கு 1.24 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுகிறது. இந்த புதிய உத்தி அந்த செலவுகளை குறைக்கப்பதோடு தெருக்களின் சுத்தத்தை மேம்படுத்தும் என்று நம்புகின்றது. மேலும் இது மக்களை பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள உதவும்.

First published:

Tags: Idea, London