முகப்பு /செய்தி /உலகம் / 20 நிமிடங்களில் ஒமைக்ரான் உள்ளதா என கண்டறியலாம் - புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு

20 நிமிடங்களில் ஒமைக்ரான் உள்ளதா என கண்டறியலாம் - புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு

Omicron

Omicron

பொதுவாக ஒமைக்ரானை கண்டறிய 24 முதல் 96 மணி நேரங்கள் தேவை என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வகையான ஒமைக்ரான் வேரியண்டை 20 நிமிடங்களில் கண்டறியும் வகையில் புதிய பரிசோதனை முறை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் எனும் உருமாறிய வைரஸாக மாறியிருப்பது உலக நாடுகளை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தியுள்ளது. முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவிவருகிறது.

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும் தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸை கண்டறிய உதவும் ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் பரிசோதனை செய்தால் ஒமைக்ரானை கண்டறிய முடியாது. மேலும் தற்போது இருக்கக் கூடிய ஒமைக்ரான் பரிசோதனை முறை என்பது மிகவும் செலவுமிக்கதாகவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. பொதுவாக ஒமைக்ரானை கண்டறிய 24 முதல் 96 மணி நேரங்கள் தேவை என கூறப்படுகிறது.

இந்நிலையில், தென் கொரியாவின் போஹாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒமைக்ரான் வேரியண்டை விரைவாக கண்டறியும் வகையிலான பரிசோதனை முறையை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவு பேராசிரியர் லீ ஜங்-வூக் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த சோதனை முறையை கண்டறிந்துள்ளது.

ஒமைக்ரான் என்பது கோவிட்-19 வைரஸால் உயிரணுக்களைப் பாதிக்கப் பயன்படும் ஸ்பைக்கில் 26-32 பிறழ்வுகள் கொண்ட ஒரு மாறுபாடு ஆகும். இக்குழு உருவாக்கியுள்ள ‘மூலக்கூறு கண்டறிதல் தொழில்நுட்பம்’ ஒற்றை நியூக்ளியோடைடு தளத்தில் உள்ள பிறழ்வுகளை வேறுபடுத்தி 20 நிமிடங்களில் அறிந்து முடிவுகளை இணையத்தில் பதிவேற்றலாம்,  மேலும் இது PCR சோதனைகளால் கண்டறிய கடினமாக இருக்கும் "Stealth Omicron" ஐ கண்டறிய முடியும்.

அதே நேரத்தில் தற்போதைய ஒமைக்ரான் கண்டறியும் தொழில்நுட்பங்களால், வைரஸின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே அறிய முடியும், இந்த ‘மூலக்கூறு கண்டறிதல் தொழில்நுட்பம்’ மூலம் கோவிட்-19 ஆர்என்ஏ இருக்கும் போது மட்டுமே நியூக்ளிக் அமிலம்-பிணைப்பு எதிர்வினைகள், விரைவான கண்டறிதலை செயல்படுத்துகிறது.

இந்த தொழில்நுட்பம் தற்போது வணிகமயமாக்கலுக்கு முன் உள்ளது. இருப்பினும், Omicron க்கான PCR சோதனை உருவாக்கப்படாத தற்போதைய சூழ்நிலைகளில் இது ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்தப்படலாம்.

Must read : 21 ஆண்டுகளுக்கு பின் மிஸ் யுனிவர்ஸாக இந்திய அழகி தேர்வு- யார் இந்த ஹர்னாஸ் சந்து?

இந்த தொழில்நுட்பத்தின் வெளிப்பாடு, கூடிய விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும் என்று நம்புகிறேன்," என்று பேராசிரியர் லீ கூறினார். கொரோனாவுக்கு பிறகு வெளிவரக்கூடிய புதிய மாறுபாடுகளை விரைவாகக் கண்டறிந்து வெளிப்படுத்த முயற்சிப்போம் எனவும் அவர் கூறினார்.

First published:

Tags: Corona, Omicron