பாகிஸ்தானில் சட்டவிரோத கொலைகள் பற்றி பேசிய மனித உரிமை ஆர்வலருக்கு அதிகாரிகள் மிரட்டல்!

பாகிஸ்தானில் சட்டவிரோத கொலைகள் பற்றி பேசிய மனித உரிமை ஆர்வலருக்கு அதிகாரிகள் மிரட்டல்!
தடுக்கப்பட்ட நாஸிர்
  • News18
  • Last Updated: October 28, 2019, 5:54 PM IST
  • Share this:
பாகிஸ்தானில் மனித உரிமை ஆர்வலர் ஜிப்ரான் நாசிர் ஊடகங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அதிகாரிகள், அவரை பேசக் கூடாது என்று தடுத்த சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி போலீசாரால் பலர் கொல்லப்படுவது தொடர் கதையான நிலையில், இது தொடர்பாக கராச்சி பின்னாலே என்ற நிகழ்ச்சியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலரான ஜிப்ரான் நாஸிர், ஊடகங்களை சந்தித்து பேசினார். அப்போது, நீதிமன்ற உத்தரவுகளுக்கு, சட்டத்திற்கு புறம்பாக போலீசார் - அரசு நடத்தும் செயல்பாடுகள் குறித்து அவர் விளக்கிக்கொண்டிருந்தார்.


அப்போது, அங்கு வந்த அதிகாரிகள் ஊடகங்களின் மைக்குகளை அகற்றினர். மேலும், நாஸிர் ஊடகங்களிடம் பேசக்கூடாது என்று தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.444 பேர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதை பற்றிய ஆதாரங்களை காட்சிப்படுத்தினால், உளவுத்துறை அதிகாரிகள் அதனை மூடச் சொல்கின்றனர். ஊடகங்களிடமும் பேச தடை செய்கின்றனர் என்று நாஸிர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
First published: October 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்