மான்சாண்டோ நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் தீர்ப்பு!

தொடக்க காலத்திலிருந்து மான்சாண்டோ, நிறுவனம், செடிகளைக் கொல்லும் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்பதை ஆதாரங்கள் மூலம் அந்த நிறுவனம் நிருபிக்கவில்லை’ என்று ஆதாரங்களை சமர்பித்தது.

news18
Updated: May 14, 2019, 9:27 PM IST
மான்சாண்டோ நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் தீர்ப்பு!
மான்சாண்டோ(மாதிரிப் படம்)
news18
Updated: May 14, 2019, 9:27 PM IST
மான்சாண்டோ நிறுவனத்தின் பொருளால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு இழப்பீடாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கவேண்டும் என்று கலிஃபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

ஜெர்மனைச் சேர்ந்த மான்சாண்டோ நிறுவனம், மரபணு மாற்றப்பட்ட விதைகள், செடிகளைக் கொல்லும் கெமிக்கல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தம்பதி, ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மான்சாண்டோ நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் மான்சாண்டோ நிறுவனத்தின் தயாரிப்பை பயன்படுத்தியால் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். அதுதொடர்பான வழக்கில், மான்சாண்டோ நிறுவனத்துக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர்கள், ‘தொடக்க காலத்திலிருந்து மான்சாண்டோ, நிறுவனம், செடிகளைக் கொல்லும் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்பதை ஆதாரங்கள் மூலம் அந்த நிறுவனம் நிருபிக்கவில்லை’ என்று ஆதாரங்களை சமர்பித்தது.


அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்த கலிஃபோர்னியா நீதிமன்றம், ’பாதிக்கப்பட்ட தம்பதிக்கு இழப்பீடாக இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக மான்சாண்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Loading...
Also see:

First published: May 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...