முகப்பு /செய்தி /உலகம் / சாப்பாட்டிற்காக வெடித்த சண்டை... அண்ணன் மீது தண்ணீர் ஊற்றியதற்காக சிறைவாசம் செய்யப்போகும் 64 வயது தம்பி

சாப்பாட்டிற்காக வெடித்த சண்டை... அண்ணன் மீது தண்ணீர் ஊற்றியதற்காக சிறைவாசம் செய்யப்போகும் 64 வயது தம்பி

சகோதரர் முகத்தில் தண்ணீர் உற்றியதால் கைது செய்யப்பட்ட நபர்

சகோதரர் முகத்தில் தண்ணீர் உற்றியதால் கைது செய்யப்பட்ட நபர்

உணவுப் பொருளுக்காக ஏற்படும் தகராறு காரணமாக அண்ணன் மீது தண்ணீர் ஊற்றிய தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaFloridaFloridaFlorida

பொதுவாக அண்ணன், தம்பி இடையே வீட்டில் சிறிய விவகாரங்களுக்காக ஜாலி சண்டைகள் ஏற்படுவதை பார்த்திருப்போம். அப்படியொரு சில்லறை சண்டையின்போது தனது மூத்த சகோதரர் மீது இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றிய குற்றத்திற்காக 64 வயது தம்பி கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம், இந்த வினோத சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லி கவுன்டி என்ற பகுதியில் வசிப்பவர் டேவிட் ஷெர்மன் பவெல்சன். இவருக்கு வயது 64. இவரின் மூத்த சகோதரருக்கு வயது 65. இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வீட்டில் இருந்தபோது சாப்பாட்டு விஷத்திற்காக தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டில் எலுமிச்சம் பழத்தை கொண்டு ஒரு உணவு பொருளை தாயரித்து வைத்திருந்த நிலையில், அதை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த உணவை மூத்த சகோதருக்கு ஒரு வாய் கூடாத தராமல் இளையவர் டேவிட் ஷெர்மன் மட்டும் சாப்பிட்டுள்ளார்.

எனக்கு தராமல் நீ மட்டும் எப்படி சாப்பிடலாம் என்ற தம்பியை அண்ணன் கேட்க வாக்குவாதம் முற்றிப்போய் தகராறாக மாறியுள்ளது. அப்போது நாற்காலியில் அமர்ந்திருந்த சகோதரரின் மீது மேஜையில் இருந்த இரு கிளாஸ் தண்ணீரை ஊற்றியுள்ளார். பயந்து போன அண்ணன், போலீசுக்கு போன் செய்து தம்பி தன்னை தாக்கியதாக புகார் அளிக்கவே 65 வயது தம்பி டேவிட் ஷெர்மனை காவல்துறை கைது செய்துள்ளது.

அந்த மாகாணத்தின் சட்ட விதிகளின் படி குடும்ப உறுப்பினர்களை அறிந்தே தாக்குதல் நடத்தினால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். உணவு பொருளுக்காக அண்ணன் தம்பிக்குள் எழுந்த தகராறு இத்தகைய களேபரமாக முடிந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Family fight, Fight, Florida, Viral News