ஹோம் /நியூஸ் /உலகம் /

புதிய பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!

புதிய பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!

பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரதமர் போரிஸ் ஜான்சன்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதபோதிலும், பிரெக்சிட் நிறைவேற்றப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பிரெக்சிட் புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, பிரிட்டன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் காலக்கெடு, வருகிற 31-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இந்தநிலையில், வியாழன் அன்று பெல்ஜியமின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற சந்திப்பில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் இடையே, புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதியானது.

இந்தநிலையில் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக, பிரிட்டன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.  முதலில் பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான விவாதம் நடைபெற்று பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதபோதிலும், பிரெக்சிட் நிறைவேற்றப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளும், பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் நிறைவேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

Also see...

First published:

Tags: BREXIT