முதல் பக்கத்தில் செய்திகளை கருப்பு மை பூசி வெளியிடப்பட்ட ஆஸி. பத்திரிக்கைகள்!

ஆஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

முதல் பக்கத்தில் செய்திகளை கருப்பு மை பூசி வெளியிடப்பட்ட ஆஸி. பத்திரிக்கைகள்!
ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள்
  • Share this:
ஆஸ்திரேலியாவில் செயல்படும் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் இன்று தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன.

போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்களான ஏபிசி மற்றும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர்களின் வீடுகளில் கடந்த ஜூன் மாதம் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அரசின் முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிகை நிறுவனங்கள் குற்றம்சாட்டின. பத்திரிகைகளுக்கு அரசு ஆதரவு இருக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என்று ஆஸ்திரேலிய அரசு கூறியது.


ஆஸ்திரேலியாவில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக பத்திரிகையாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளார்கள். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிக்கை, தி ஆஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிகைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை ட்விட்டரில் பதிவு செய்து, ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம் உள்ளது’ என்று கூறியுள்ளார். 

First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்