அத்தனை தீவிரவாத இயக்கங்களுக்கும் எதிராகப் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனான தொலைபேசி உரையாடலில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் சுமார் 40 வீரர்கள் பலியாகினர்.
இந்நடவடிக்கைக்குப் பின்னர் இரு நாடுகளும் நடத்திய வான்வெளித் தாக்குதல்களால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.
இத்தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரை வளர்த்துவிடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்தியது.
ஆனால், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”பிரச்னைக்கான காரணம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்து ஆலோசித்தனர். இந்தியா உடன் பதற்றத்தை நீடிக்காமல் அமைதி வழியைத் தேர்ந்தெடுத்த பாகிஸ்தானின் நடவடிக்கையை தெரேசா மே பாராட்டினார் ” எனக் கூறியுள்ளது.
மேலும் பார்க்க: நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.