அமெரிக்காவில் தெருவில் அசால்டாக நடந்து சென்ற வங்கப்புலி-வைரல் வீடியோ..

வைரல் வீடியோ

அமெரிக்காவில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் வங்கப்புலி ஒன்று சுற்றித்திரிந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின், மேற்கு ஹூஸ்டன் பகுதியில், திங்கட்கிழமை வங்கப்புலி ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அதிகாலை நேரத்தில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் புலி புகுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கூச்சலிட தொடங்கிய குடியிருப்பு வாசிகள், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். மேலும், சிலர் துப்பாக்கியுடன் வீதிகளில் வந்து காத்திருந்தனர். இருப்பினும், புலி அப்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு குடியிருப்பாக உலாவத் தொடங்கியது. பலரும் இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

https://twitter.com/robwormald/status/1391579206262300674?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1391579206262300674%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fwatch-royal-bengal-tiger-with-collar-around-neck-strolling-in-us-neighborhood-baffles-netizens-3724622.html

சிறிது நேரத்தில் அங்கு விரைந்த வந்த காவல்துறையினர், புலி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, குடியிருப்பவாசிகள் தெரிவித்த தகவல் காவல்துறையினருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. வங்கப் புலியை, வெள்ளை நிற வாகனத்தில் ஒருவர் வந்து சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர். புலி எங்கிருந்து வந்தது? அந்த புலியை யார் அழைத்துச் சென்றது என்பது குறித்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை. ஹூஸ்டன் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலியின் வருகை குறித்து பேசிய அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவர், "நன்றாக தூங்கிக்கொண்டிருந்தேன். வெளியில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன். ஜன்னல் வழியாக பார்க்கும்போது பலர் கூச்சலிட்டனர். கண்களை தேய்த்து நன்றாக பார்க்கும்போது தான் தெரிந்து அவருக்கு முன் புலி இருந்தது. அதிர்ச்சியாகி விட்டேன். திடீரென காரில் ஒரு நபர் வந்து, புலியை அழைத்துச் சென்றார். அவர் யார் என தெரியவில்லை. அவர் வந்து சென்றபிறகு காவல்துறையினர் வந்தனர்" என்றார்.

https://twitter.com/michaelschwab13/status/1391613625517887488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1391613625517887488%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fwatch-royal-bengal-tiger-with-collar-around-neck-strolling-in-us-neighborhood-baffles-netizens-3724622.html

இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், ஐவி வால் டிரைவுக்கு அருகாமையில் நெடுஞ்சாலை எண் 6வது பகுதியில் புலி உலாவுகிறது. இதனை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். வீடியோவில் வீடுகளுக்கு முன்பு இருக்கும் பசுமை தரையில் உலாவும் புலி ஒன்று, வீதியில் துப்பாக்கியுடன் இருக்கும் ஒருவரை நோக்கி செல்கிறது. அவர் துப்பாக்கி வைத்திருந்தாலும், பயத்தில் அலறுகிறார். அருகில் இருக்கும் மற்ற குடியிருப்பு வாசிகளும் கூச்சலிடுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில், வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருக்கும் நபர் ஒருவர் புலியை சமானதப்படுத்துகிறார். அவர் தான் புலியை அழைத்துச் சென்றிருக்கிறார். கம்பீரமாக இருக்கும் வங்க புலியை எங்கு வைத்து வளர்க்கிறார்கள்? அதற்கு முறையான அனுமதி இருக்கிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காட்டில் இருக்க வேண்டிய புலியை வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டவிரோதம் இல்லையா? என்றும் வினவியுள்ள நெட்டிசன்கள், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து புலியை வளர்ப்பவரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: