ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஜிம்முக்கு செல்ல தடை – தலிபான்கள் அதிரடி

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஜிம்முக்கு செல்ல தடை – தலிபான்கள் அதிரடி

மாதிரி படம்

மாதிரி படம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஜிம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர்கள் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • int, IndiaAfkhanistanAfkhanistanAfkhanistanAfkhanistanAfkhanistan

  ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தலிபான் அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆயுதப் புரட்சி மூலம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். தலிபான்களின் அரசை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்றாலும், அவர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே பல அதிரடி சட்டங்களை அமல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

  பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு என பல்வேறு விவகாரங்களிலும் தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் தலிபான்களின் அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது புதிய கட்டுப்பாடு ஒன்று பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது என தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.

  போரிட்டு வெற்றி பெற தயாராக இருங்கள்.. ராணுவத்திற்கு சீன அதிபர் உத்தரவு

   ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலின வித்தியாசமே இல்லாமல் போனதால் இது போன்ற  தடைகள் விதிக்கப்படுவதாகவும், ஹிஜாப் அணிவது, பொது இடங்களில் தலைப்பாகை அணிவது உள்ளிட்ட நடைமுறைகளை பெண்கள் பின்பற்றாமல் இருப்பதாகவும், அந்நாட்டு மத விவகாரங்களுக்கான அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பெண்கள் பூங்காக்களுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  “தாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து கண்ணியத்தோடு பெண்களின் உரிமையை காக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தோம். பூங்காக்கள் மற்றும் ஜிம்மஜில் பெண்கள் மட்டும் பயன்படுத்துவதற்கு தனி நாட்களை ஒதுக்கச் சொல்லி வலியுறுத்தினோம். ஆனால் யாரும் அதை நடைமுறைப்படுத்தாததால் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என மத விவகாரங்களுக்கான துறையின் செய்தி தொடர்பாளர் மொகமது அகே மொஹஜர் கூறியுள்ளார்.

  மன்னரை நோக்கி பறந்து வந்த முட்டை.. பதறிப்போன பாதுகாவலர்கள்.. பிரிட்டனில் பரபரப்பு

  பூங்கா, ஜிம் உள்ளிட்ட பொது இடங்களில் ஹிஜாப் கூட அணியாமல் பெண்கள் ஆண்களோடு இருப்பதை பல நேரங்களில் கண்டிருக்கிறோம்..இது மார்கத்திற்கு விரோதமானது என்பதால் அதை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும் தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது.

  சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் கிடைக்காமல் அந்நாட்டுக்கு கிடைத்து வந்த உதவிகளும் குறையத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு மக்கள் பசியாலும் வறுமையாலும் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் தலிபான்கள் அரசு இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதை தீவிரப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் ஆப்கனில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தலிபான் அரசு மேலும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Afghanistan, Taliban