அமெரிக்காவின் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் 2 கொரில்லாக்கள் கொரோனவால் பாதிப்பு!
கொரில்லாக்கள் பராமரிக்கப்பட்டு வரும் சான் டியாகோ உயிரியல் சஃபாரி பூங்காவில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Credits: AFP
- News18
- Last Updated: January 12, 2021, 7:14 PM IST
அமெரிக்கவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் கொரோனா வைரஸால் ( coronavirus) இரண்டு கொரில்லாக்கள் (gorillas) பாதிக்கப்பட்டுள்ளன. கலிஃபோர்னியாவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் (California's San Diego Zoo) குறைந்தது இரண்டு கொரில்லாக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று (ஜன.11) உறுதி செய்யப்பட்டது. ஏப்ஸ் (Apes) என்றழைப்படும் மனித குரங்குகளுக்கு இயற்கையாக கொரோனா தொற்று பரவியதற்கான முதல் நிகழ்வு இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆளுநர் கவின் நியூசோம் கூறியதாவது, "இந்த இரண்டு கொரில்லா குரங்குகளுக்கும் கடந்த வாரம் இருமல் பிரச்சனை இருந்தது. இதனால் அவற்றிற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அவை இரண்டிற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மற்றொரு கொரில்லா சில கொரோனா அறிகுறிகளை கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
மேலும், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் கொரில்லாக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து உலக புகழ்பெற்ற உயிரியல் பூங்காவின் இயக்குனர் லிசா பீட்டர்சன் தெரிவித்தாவது, " பாதிக்கப்பட்ட இரு கொரில்லாக்களுக்கும் இருமல் மற்றும் கன்ஜெசன் தவிர வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை. மேலும் அவை இரண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கு சாப்பாடு, குடிநீர் ஆகியவை தனித்தனியாக வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இரு கொரில்லாக்களும் குணமடைந்து விடும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். கொரில்லாக்கள் தங்கள் டி.என்.ஏவில் 98% வரை மனிதர்களை ஒத்திருக்கின்றன. மேலும் மனிதரல்லாத சில விலங்கினங்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகும் என்றும் முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், மனித தொடர்புகள் இல்லாமல் இயற்கையாகவே கொரில்லாக்கள் கொரோனவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 1.94 மில்லியன் மனிதர்களைக் கொன்ற இந்த கடுமையான நோயினை எதிர்த்து கொரில்லாக்கள் போராடுமா?, இந்த கொரோனா வைரஸால் மற்ற விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் இது குறித்து பீட்டர்சன் கூறியதாவது, "ஒரு வருடத்திற்கும் மேலாக எங்கள் குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் வனவிலங்குகளை தொற்றுநோய் வைரஸிலிருந்து பாதுகாக்க அயராது உழைத்து வருகின்றனர். எங்கள் ஊழியர்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை பொறுத்தவரை எங்கள் பராமரிப்பு முதலிடத்தில் உள்ளது," என்று அவர் கூறினார். மேலும் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொரில்லாக்களுக்கு அருகில் செல்லும் போது முகக்கவசங்கள், கையுறைகளை அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டது.
Also read... டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருந்து ஒரு குரல்!கொரில்லாக்கள் பராமரிக்கப்பட்டு வரும் சான் டியாகோ உயிரியல் சஃபாரி பூங்காவில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில் தெற்கு கலிபோர்னியா பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கொரோனா தொற்றுநோய் உலக அளவில் அதிகப்படியான மக்களுக்கு பரவியதை தொடர்ந்து, மனிதர்கள் மூலம் செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா பரவல் ஏற்பட்டது. முதன் முதலில் ஹாங்காங்கில் ஒரு பூனை கொரோனாவால் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாத இறுதியில், நியூயார்க்கில் இரண்டு செல்லப்பிராணி பூனைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டன. இது அமெரிக்காவில் உள்ள வளர்ப்பு பிராணிகளுக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு நிகழ்வு ஆகும். அதேபோல, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, பிரிட்டனில் பூனைகள், ஹாங்காங் உயிரியல் பூங்காவில் ஒரு புலி மற்றும் நெதர்லாந்து பண்ணைகளில் உள்ள விலங்குகள் போன்றவற்றிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வனவிலங்கு பூங்காவில் உள்ள கொரில்லாக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இது குறித்து ஆளுநர் கவின் நியூசோம் கூறியதாவது, "இந்த இரண்டு கொரில்லா குரங்குகளுக்கும் கடந்த வாரம் இருமல் பிரச்சனை இருந்தது. இதனால் அவற்றிற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அவை இரண்டிற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மற்றொரு கொரில்லா சில கொரோனா அறிகுறிகளை கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
மேலும், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் கொரில்லாக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து உலக புகழ்பெற்ற உயிரியல் பூங்காவின் இயக்குனர் லிசா பீட்டர்சன் தெரிவித்தாவது, " பாதிக்கப்பட்ட இரு கொரில்லாக்களுக்கும் இருமல் மற்றும் கன்ஜெசன் தவிர வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை. மேலும் அவை இரண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.