எலியில் இருந்து எச்.ஐ.வி. கிருமித்தொற்றை அகற்றி ஆராய்ச்சியாளர்கள் சாதனை...!

ஓராண்டுகளில் மனிதர்களுக்கு இந்த சோதனை மேற்கொண்டு ஆய்வு நடத்தப்படும் என்று ஆராய்ச்சியாளர் க்ஹாலிலி கூறியுள்ளார்.

news18
Updated: July 4, 2019, 8:39 AM IST
எலியில் இருந்து எச்.ஐ.வி. கிருமித்தொற்றை அகற்றி ஆராய்ச்சியாளர்கள் சாதனை...!
எச்.ஐ.வி.
news18
Updated: July 4, 2019, 8:39 AM IST
உயிர்க்கொல்லி கிருமியாக அறியப்படும் எச்.ஐ.வி கிருமியை அழிக்கும் மருந்தை கண்டறிய, உலகம் முழுவதும் பல ஆராய்சிகள் நடந்து வரும் நிலையில், அதற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

எச்.ஐ.வி (Human Immunodeficiency Virus) எனும் உயிர்க்கொல்லி கிருமி பாலியல் உறவு, ரத்தப்பறிமாற்றம் போன்றவற்றால் மனிதர்களுக்கு இடையே பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை முதலில் தாக்குகிறது. பின்னர், நாட்கள் செல்லச்செல்ல ஜீன்களில் கிருமியானது கலந்துவிடுகிறது.

எச்.ஐ.வி கிருமி தாக்கப்பட்ட ஒருவர் நேரடியாக அக்கிருமியால் உயிரிழப்பதில்லை. கிருமி தாக்கியதும் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவதால் சந்தர்ப்பவாத நோய்கள் மற்றும் உடலுறுப்புகள் செயலிழப்பு ஆகியவை ஏற்படுகிறது. எச்.ஐ.வி கிருமி இறுதிகட்டத்தை எட்டும் போது அது எய்ட்ஸ் (acquired immune deficiency syndrome) என்று அழைக்கப்படுகிறது.


எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த தற்போது வரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இதற்காக கடுமையாக முயன்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றி அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் சாதித்துள்ளனர்.

எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதற்கு செலுத்தி, எலியின் ஜீன்-களில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றியுள்ளனர். எச்.ஐ.விக்கான தீர்வு கிடைப்பதில் இது முதல் வெற்றி என்று கூறப்படுகிறது.

தற்போது, எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி எனும் கூட்டு மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். இந்த சிகிச்சை முழுவதும் நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றாது என்றாலும், பாதிக்கப்பட்டவர்களில் வாழ்நாளை நீட்டித்து அவர்கள் இயல்பாக வாழ வழி செய்கிறது.

Loading...

தற்போது, எலிகள் மீதான சோதனையை CRISPR-Cas9 என்று குறிப்பிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஜீன்களை மாற்றி அமைப்பது இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும்.

இன்னும் ஓராண்டுகளில் மனிதர்களுக்கு இந்த சோதனை மேற்கொண்டு ஆய்வு நடத்தப்படும் என்று ஆராய்ச்சியாளர் க்ஹாலிலி கூறியுள்ளார்.

எச்.ஐ.வி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்...!

First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...