• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • முதல் முறையாக நியூயார்க் நகரில் தீபாவளிக் கொண்டாட்டம்!

முதல் முறையாக நியூயார்க் நகரில் தீபாவளிக் கொண்டாட்டம்!

நியூயார்க் நகரில் தீபாவளிக் கொண்டாட்டம்

நியூயார்க் நகரில் தீபாவளிக் கொண்டாட்டம்

சவுத் ஏஷியன் என்கேஜ்மென்ட் ஃபவுண்டேஷனின் (SAEF) டிரஸ்டீயான ராகுல் வாலியா “உலக வர்த்தக மையத்தை விட வலிமை மற்றும் வெற்றியை பறைசாற்றும் சின்னம் இல்லை.

  • Share this:
உலகம் முழுவதிலும் பரவலாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்முறை ஒரு புதிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. நியூயார்க் நகரின் அடையாளங்களில் ஒன்றான, உலக வர்த்தக மையத்தில் வரலாற்றில் முதன்முறையாக தீபாவளி அடிப்படையிலான அனிமேஷன் மற்றும் அலங்காரங்கள் இடம்பெற்றன. நவம்பர் 2 மாலை 6 மணிக்கு தொடங்கிய அனிமேஷன் நவம்பர் 4 நள்ளிரவு வரை லைவாக டிஸ்ப்ளே செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி தீபாவளி கொண்டாட்டத்தில் கண்கவரும் வான வேடிக்கைகளும் இடம் பெற்றது.

உலகம் முழுவதிலும் பல நாடுகளில் குடியேறிய மற்றும் வசித்துவரும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கணிசமான அளவு இந்துக்கள் வசிக்கும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அந்தந்த நாட்டு அரசாங்கமே தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.

அதேபோல லட்சக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகை இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிக்கு பொது விடுமுறை அளிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதற்கான கோரிக்கை சில நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாகவே அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா முதல் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் பெண்மணியான கரோலின் வரை பலரும் இந்தியர்களின் பண்டிகைக்கு, குறிப்பாக தீபாவளிக்கு முக்கியத்துவம் அளித்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அதிபர் மாளிகையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் தீபாவளி கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அனிமேஷன் காட்சிகள் கிட்டத்தட்ட இரண்டரை நாட்களுக்கு மேலாக லைவ் ஆக ஒளிபரப்பபட்டது. கட்டிடத்தில் தீபம் எரிவதைப் போல அனிமேஷன் உருவாக்கப்பட்டிருந்தது அதுமட்டுமின்றி ஹட்சன் நதிக்கரையின் இரண்டு பக்கங்களிலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நியூயார்க் நகரின் தீபாவளிக் கொண்டாட்டப் புகைப்படங்கள் இங்கே.



டர்ஸ்ட் அமைப்பின், மார்க் டோமினோ “அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக, இந்த WTC மேடையில் வண்ணமயமான காட்சிகள் தீபாவளி கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" கூறினார்.

சவுத் ஏஷியன் என்கேஜ்மென்ட் ஃபவுண்டேஷனின் (SAEF) டிரஸ்டீயான ராகுல் வாலியா “உலக வர்த்தக மையத்தை விட வலிமை மற்றும் வெற்றியை பறைசாற்றும் சின்னம் இல்லை. அது மட்டுமின்றி, தீபாவளி வாழ்த்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சியில், டர்ஸ்ட் அமைப்புடன் இணைந்து பணியாற்றியதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

Also read... மணலில் ‘ராமாயண’ ஓவியங்கள்… அயோத்தியில் மணல் கலைஞர் சாதனை!

அமெரிக்காவின் முதல் அதிகாரப்பூர்வமான தீபாவளி கொண்டாட்டம், நியூயார்க் காவல் துறை அதிகாரிகளுக்குக்கு அர்பணிதத்தில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

இந்திய-அமெரிக்க உறவை பலப்படுத்தவும், இந்தியர்கள் தங்கள் பாரம்பரிய பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: