சவுதி அரேபிய இளவரசர் விமானத்தில் அமெரிக்கா சென்ற இம்ரான் கான்!

நீங்கள் தனியார் நிறுவன விமானத்தில் செல்லக்கூடாது. என்னுடைய சொந்த விமானத்தில் செல்லுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

சவுதி அரேபிய இளவரசர் விமானத்தில் அமெரிக்கா சென்ற இம்ரான் கான்!
இம்ரான் கான்
  • News18
  • Last Updated: September 22, 2019, 4:34 PM IST
  • Share this:
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்குச் சொந்தமான தனி விமானத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். நாளை அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து பேசவுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். அதற்காக, நேற்று மோடி அமெரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து, 23-ம் தேதி, ஐக்கிய நாடுகள் அவையில், பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்தநிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து தனியார் விமானம் மூலம் இம்ரான் கான் அமெரிக்காவுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், இம்ரான் கானிடம் நீங்கள் எங்களுடைய சிறப்பு விருந்தினர். எனவே, நீங்கள் தனியார் நிறுவன விமானத்தில் செல்லக்கூடாது. என்னுடைய சொந்த விமானத்தில் செல்லுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.


அதனைத்தொடர்ந்து, முகமது பின் சல்மானின் விமானத்தில், இம்ரான் நேற்று அமெரிக்கா வந்தடைந்தார். அவர், நாளை அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்திக்கவுள்ளார். 74-வது ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேசவுள்ளனர்.

Also see:

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்