அமெரிக்கர்கள் முடக்கப்பட்டிருந்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா? நியூயார்க்கில் கொதித்த இம்ரான் கான்

9 லட்சம் ராணுவத்தினருக்கு காஷ்மீரில் என்ன வேலை? எப்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறதோ? அதன்பிறகு என்ன நடக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

அமெரிக்கர்கள் முடக்கப்பட்டிருந்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா? நியூயார்க்கில் கொதித்த இம்ரான் கான்
இம்ரான் கான்
  • News18
  • Last Updated: September 25, 2019, 10:16 PM IST
  • Share this:
சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் எனக்கு ஏமாற்றமளித்துள்ளது என்று அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பப்ட்டது.

இன்று நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘சர்வதேச சமுகத்தின் நடவடிக்கைகள் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை 80 லட்சம் ஐரோப்பியர்கள் அல்லது யூதர்கள் அல்லது வெறும் எட்டு அமெரிக்கர்கள் காஷ்மீர் போல அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் இப்படித்தான் இருந்திருப்பீர்களா? உங்களுடைய எதிர்வினை இப்படித்தான் இருந்திருக்குமா?


காஷ்மீர் முடக்கப்பட்டிருப்பதை நீக்கச் சொல்லி இதுவரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு அழுத்தம் கூட தரவில்லை. 9 லட்சம் ராணுவத்தினருக்கு காஷ்மீரில் என்ன வேலை? எப்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறதோ? அதன்பிறகு என்ன நடக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

இந்தியாவின் பொருளாதார மதிப்பின் காரணமாகவும், உலக அரங்கில் அந்நாட்டுக்கு உள்ள செல்வாக்கின் காரணமாகவும், காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கூறுவதை உலக சமூகம் கவனிக்க மறுக்கிறது. இந்தியா 120 கோடி மக்கள் கொண்ட மிகப் பெரும் சந்தை. அதன் காரணமாக அந்த நாட்டுக்கு நெருக்கடி அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்