Home /News /international /

மோடியின் வாழ்த்துச் செய்தி வந்துள்ளது...! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வீட்

மோடியின் வாழ்த்துச் செய்தி வந்துள்ளது...! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வீட்

இம்ரான் கான் | மோடி

இம்ரான் கான் | மோடி

குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர். எனினும், சமீப காலமாக எல்லையில் அமைதி நிலவுகிறது.

  • News18
  • Last Updated :
    பாகிஸ்தான் தேசிய தினமான இன்று மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும், இதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களான இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியது, பின்னர் விடுவிக்கப்பட்டது ஆகியவற்றால் இரு நாடுகளுக்கு இடையேயான விரிசல் மேலும் அதிகமானது.

    குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர். எனினும், சமீப காலமாக எல்லையில் அமைதி நிலவுகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் நிகழ்ச்சி நடந்தது. இதில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

    “பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடியிடம் இருந்து வாழ்த்துச் செய்தி வந்துள்ளது” என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.



    “பாகிஸ்தான் தேசிய தினத்தை ஒட்டி பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வன்முறை மற்றும் பயங்கரவாதம் இல்லாத ஜனநாயகமான, அமைதியான, வளர்ச்சியான பிராந்தியத்துக்காக துணைக் கண்டத்தைச் சேர்ந்த மக்கள் இணைந்து பணியாற்றுவதற்கான நேரம்” என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளதாக இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.

    Also See...

    Published by:Sankar
    First published:

    Tags: India Strikes Back, Lok Sabha Election 2019

    அடுத்த செய்தி