Home /News /international /

பாகிஸ்தானால் முழு தேசிய அடைப்பை அமல்படுத்த முடியாது - பாக். பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானால் முழு தேசிய அடைப்பை அமல்படுத்த முடியாது - பாக். பிரதமர் இம்ரான் கான்

இம்ரான் கான்

இம்ரான் கான்

நிலை இப்படியே தொடர்ந்தால் 4 முதல் 5 சதவிகிதம் மக்கள் சோதனைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். அது பாகிஸ்தானுக்கு பெரிய அழுத்தத்தை அளித்துவிடும்.

    பாகிஸ்தான் அரசால் முழு தேசிய அடைப்பை அமல்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக மொத்தம் 464 பேர் உறுதிசெய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். நாட்டின் சில இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டும், எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். முழு தேசிய ஊரடங்கை பாகிஸ்தான் சமாளிப்பது மிகவும் கடினமானது. வறுமையில் இருக்கும் மக்களுக்கு அது மேலும் பெரிய பாரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் அவர், “நாட்டின் சில பகுதிகளில் முழு அடைப்பு அமலில் இருந்தாலும், முழு நாட்டுக்கும் ஊரடங்கு போன்ற முழு அடைப்பை அமல்படுத்த முடியாது. ஏழை மக்கள் மேலும் சிரமத்துக்கு ஆளாவார்கள். சீனாவை மாதிரியாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நிலை இப்படியே தொடர்ந்தால் 4 முதல் 5 சதவிகிதம் மக்கள் சோதனைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். அது பாகிஸ்தானுக்கு பெரிய அழுத்தத்தை அளித்துவிடும். நிலைமையைச் சமாளிக்கும் பொருளாதார பலத்திற்காக அரசு திட்டமிட்டுக்கொண்டிருப்பதாகவும்’ தெரிவித்துள்ளார்.
    Published by:Gunavathy
    First published:

    அடுத்த செய்தி