கர்தார்பூருக்கு வரும் யாத்ரீகர்களுக்கு 2 நாட்களுக்கு கட்டணமில்லை - இம்ரான் கான் அறிவிப்பு!

புனித பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், விசா இன்றி அங்கு செல்ல அனுமதி வழங்கிய பாகிஸ்தான், அவர்களிடம் இந்திய மதிப்பில் 1400 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

கர்தார்பூருக்கு வரும் யாத்ரீகர்களுக்கு 2 நாட்களுக்கு கட்டணமில்லை - இம்ரான் கான் அறிவிப்பு!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
  • News18
  • Last Updated: November 1, 2019, 4:27 PM IST
  • Share this:
இந்தியாவிலிருந்து கர்தார்பூருக்கு வரும் யாத்ரீகர்களுக்கு 2 நாட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கர்தார்பூரில் சீக்கிய மதகுருவான குருநானக் தனது வாழ்வின் இறுதிநாட்களை கழித்ததாக கூறப்படும் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புனித பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், விசா இன்றி அங்கு செல்ல அனுமதி வழங்கிய பாகிஸ்தான், அவர்களிடம் இந்திய மதிப்பில் 1400 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.


கர்தார்பூர் வழித்தடம் வரும் 8-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினமும், குருநானக்கின் 550-வது பிறந்தநாளன்றும் இந்திய யாத்ரீகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

Also see...

First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்