Home /News /international /

காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பவரே நோபல் பரிசுக்கு தகுதியானவர்! இம்ரான் கான் விளக்கம்

காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பவரே நோபல் பரிசுக்கு தகுதியானவர்! இம்ரான் கான் விளக்கம்

இம்ரான் கான்

இம்ரான் கான்

காஷ்மீர் பிரச்னையை பேசித்தீர்க்க வேண்டும். போர் மூண்டால் இருநாடுகளும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

  • News18
  • Last Updated :
    காஷ்மீர் மக்கள் விருப்பப்படி காஷ்மீர் பிரச்னையை எவர் ஒருவர் அமைதியான வழியில் தீர்க்கிறாரோ அவரே அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானப் படைக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த அபிநந்தனை, இந்தியா மற்றும் உலக நாடுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் இரண்டே நாளில் இந்தியாவிடம் ஒப்படைந்தார் பாகிஸ்தான்பிரதமர் இம்ரான்கான்.

    மேலும், இந்தியா-பாகிஸ்தான் அமைதிக்கான முன்னெடுப்பாக அபிநந்தனை திரும்ப அனுப்புகிறோம். மேலும், பாகிஸ்தான் அமைதியையே விரும்புகிறது. காஷ்மீர் பிரச்னையை பேசித்தீர்க்க வேண்டும். போர் மூண்டால் இருநாடுகளும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    அதனையடுத்து, இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தானிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இம்ரான்கானுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தானியர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்துவந்தனர். மேலும், அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபாவத் சௌத்திரி, இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். #NobelPeacePrizeForImranKhan என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானில் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது.

    இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இம்ரான் கான், ‘நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களின் விருப்பப்படி, காஷ்மீர் மக்களின் பிரச்னைகளை யார் ஒருவர் முடிவுக்கு கொண்டுவருகிறாரோ அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர்’ என்று பதிவிட்டுள்ளார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Imran khan

    அடுத்த செய்தி