முகப்பு /செய்தி /உலகம் / ''இந்திய பாஸ்போர்ட்டை உலக நாடுகள் மதிக்கின்றன'' : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

''இந்திய பாஸ்போர்ட்டை உலக நாடுகள் மதிக்கின்றன'' : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

  • Last Updated :

இந்திய பாஸ்போர்ட்டை உலக நாடுகள் மதிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் இந்திய வெளியுறவு கொள்கையை பாராட்டியிருந்த நிலையில், தற்போது அவர் கூறியுள்ள கருத்து பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்லாமாபாத்தில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இம்ரான் கான் பேசியதாவது-

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாருங்கள். அவர்கள் எல்லோருடனும் நட்புறவுடன் இருக்கிறார்கள். இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு உலக நாடுகள் கொடுக்கும் மரியாதையையும், பாகிஸ்தான் நாடுகளுக்கு கொடுக்கப்படும் மரியாதையையும் ஒப்பிட்டு பாருங்கள்.

இந்திய பாஸ்போர்ட்டைதான் உலக நாடுகள் மதிக்கின்றன. நம்முடைய வெளியுறவு கொள்கை எல்லோருடனும் நட்புறவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க - பொருளாதார நெருக்கடி.. அசாதாரண அரசியல் சூழல்: இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

முன்னதாக மலகண்ட் மாகாணத்தின் தர்காய் பகுதியில் பேசியபோது, இந்தியாவுக்கு சுதந்திரமான வெளியுறவு கொள்கை உள்ளது என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதையும் படிங்க - ரஷ்யாவின் எண்ணெய்க் கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்.. அமைதிப் பேச்சுவார்த்தையில் சுணக்கம்..

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இதன் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 4ம் தேதி திங்களன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை பெறுவதற்கு குறைந்தது 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது 179 உறுப்பினர்கள் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவாக உள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 172 ஓட்டுக்கு ஒரு ஓட்டு குறைவாக விழுந்தாலும், இம்ரான் கான் அரசு கவிழ்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Imran khan, India and Pakistan