ஹோம் /நியூஸ் /உலகம் /

இம்ரான் கானை கொல்லதான் வந்தேன்.. - கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

இம்ரான் கானை கொல்லதான் வந்தேன்.. - கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

இம்ரான் கானை கொல்ல முயற்சி

இம்ரான் கானை கொல்ல முயற்சி

பாகிஸ்தான் மக்களை இம்ரான் கான் தவறாக வழிநடத்துவதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்தி கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaIslamabadIslamabad

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. இது அந்நாட்டில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வாசிராபாதில்  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று மாலை அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார்.அப்போது அந்த பேரணியில் திடீரென இம்ரான் கான் மற்றும் அவர் அருகே இருந்தவர்கள் மீது கூட்டத்தில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. அதேபோல் அருகே இருந்தவர்கள் மீது குண்டு பாயந்தது.

  இம்ரான் கானின் இரு கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில், அவரை பாதுகாவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை. இந்த சம்பவத்தில் இம்ரான் கானை தவிர 6 பேரும் காயமடைந்த நிலையில், அதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

  இந்நிலையில், இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அந்த வாலிபரின் பெயர் நவீத் முகமது பஷீர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.தனது கொலை முயற்சி குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அவர் தந்துள்ளார். தனது வாக்குமூலத்தில் அவர், "இம்ரான் கானை மட்டும் தான் கொலை செய்ய நான் வந்தேன். வேறு யாரும் எனது குறி அல்ல. இம்ரான் கான் மக்களை தவறான வழியில் நடத்துகிறார். அதை என்னால் ஏற்க முடியவில்லை.

  அவர் மதத்திற்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்.அவரை விட மாட்டேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை. நான் சுயமாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்றார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த இம்ரான் கான் தற்போது லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காலில் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில், அடுத்த மூன்று வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  இதையும் படிங்க: பணத்துக்கு வழியில்லை.. ஓபியம் விளைவிக்கும் ஆப்கன் விவசாயிகள்

  இந்த தாக்குதல் குறித்து இம்ரான் கான் கூறுகையில், "அல்லா எனக்கு இன்னொரு வாழ்கையை தந்துள்ளார். அவர்களுக்கு என்னை கொல்ல வேண்டும். ஆனால் அல்லா என்னை காப்பாற்றுகிறார் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நான் நிச்சயம் மீண்டு வருவேன்" என்றுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் அரங்கேறி வரும் சம்பவங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Attempt murder case, Imran khan