ஹோம் /நியூஸ் /உலகம் /

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே தொடங்குவோம் - சீறும் இம்ரான்கான்.. பரபரக்கும் பாகிஸ்தான்!

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே தொடங்குவோம் - சீறும் இம்ரான்கான்.. பரபரக்கும் பாகிஸ்தான்!

இம்ரான்கான்

இம்ரான்கான்

Imran Khan: துப்பாக்கியால் சுடப்பட்டதை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட தனது நெடும் பயணத்தை செவ்வாய் கிழமை மீண்டும் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துப்பாக்கியால் சுடப்பட்டதை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட தனது நெடும் பயணத்தை செவ்வாய் கிழமை மீண்டும் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

  பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமில்லாத நிலை ஒன்றும் புதிதல்ல. அரசியல் திருப்பங்கள், குழப்பங்கள் அங்கு தொடர்கதை தான். அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தெஹரிக் –இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பதவியிழந்து தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப்பில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி தனது நீண்ட பயணத்தை கடந்த 29 ஆம் தேதி லாகூரில் இருந்து தொடங்கினார். ஆனால் அவர் வாசிராபாத் நகரில் நடைபயணம் சென்ற போது கடந்த நான்காம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டார். காலில் குண்டு பாய்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதை தொடர்ந்து அவரது நீண்ட நடைபயணம் தடைபட்டது. தற்போது மருத்துவமனையில் இம்ரான்கான் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் தனது நடைபயணம் செவ்வாய்கிழமை தொடங்கும் என அவர் அறிவித்திருக்கிறார்.

  விண்வெளிக்கு பறக்கும் குரங்குகள்.. இனப்பெருக்க ஆராய்ச்சியில் அடுத்தக்கட்டம் செல்லும் சீனா!

  எந்த இடத்தில் நான் உட்பட 11 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தேதோடு, ஒருவர் உயிர்த்தியாகம் செய்தாரோ, அந்த வாசிராபாத்தின் அதே இடத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபயணம் தொடங்கும் என அறிவித்திருக்கிறார். மருத்துவமனையில் இருப்பதால் இம்ரான்கான் நடைபயணத்தில் கலந்து கொள்ள மாட்டார் எனவும், ராவல்பிண்டியில் இருந்து அவர் நடைபயணத்தில் கலந்து கொண்டு தலைமையேற்று நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தானும் தனது தொண்டர்களும் துப்பாக்கியால் சுடப்பட்டது தொடர்பாக இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யப்படாதது குறித்து கண்டனம் தெரிவித்த இம்ரான்கான், தன்னை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவுல செய்ய வலியுறுத்துவது என் உரிமை எனக் கூறினார்.

  தேடத்தேட கிடைக்கும் மனித உடல்கள்.. ஆற்றில் விழுந்த விமான விபத்தில் 19 பேர் பலி!

  இந்த சம்பவத்தில் தற்போதைய பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லாஹ்  தற்றும் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஃபைசல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதால் வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்குவதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ராணுவ அதிகாரியை குற்றம் சாட்டுவது பாகிஸ்தான் ராணுவத்தையே அவமதிக்கும் செயல் என அந்நாட்டு ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில் இம்ரான்கான் துப்பாக்கியால் சுடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்படும் என தற்போதைய பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்திருப்பதை தான் வரவேற்பதாக அறிவித்துள்ள இம்ரான்கான், குற்றவாளிகளே விசாரணை ஆணையம் அமைத்தால் எப்படி நேர்மையான விசாரணை நடைபெறும் என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் பதிவ விலகினால் தான் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை சாத்தியம் எனவும் இம்ரான்க கான் தெரிவித்துள்ளார்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Imran khan