Home /News /international /

இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இம்ரான் கான் பாராட்டு!!

இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இம்ரான் கான் பாராட்டு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

Pakistan Former PM Imran Khan | ஏற்கனவே பிரதமராக இருந்தபோதும் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை இம்ரான் கான் பாராட்டியிருந்தார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை இந்திய மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை வெளிநாடுகளின் நலனுக்காக உள்ளது என்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

ஏற்கனவே பிரதமராக இருந்தபோதும் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அவர் பாராட்டியிருந்த நிலையில், தொடர்ந்து அவர் பல மேடைகளில் இதுபற்றி பேசி வருகிறார்.

நம்பிகையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து ஆட்சி கவிழ்ந்து பிரதமர் பதவியும் இம்ரான் கானுக்கு பறிபோனது.

இதையும் படிங்க - Exclusive | தமிழர்களை புறக்கணித்ததால்தான் இலங்கைக்கு இந்த பிரச்னை... முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் காட்டம்

தற்போது இம்ரான் கான் அடுத்த பொதுத் தேர்தலை குறி வைத்து மக்களை சந்தித்து வருகிறார். நேற்று லாகூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது-

இந்தியா அமெரிக்காவின் கூட்டாளியாக இருக்கிறது. பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவின் உதவியை இந்தியா பெறுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெறுகிறது. வல்லரசு நாடுகளிடம் இந்தியா நட்பு பாராட்டுகிறது.

இதையும் படிங்க - லாக்டவுன் விதிமுறை மீறி பார்டி - நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் பிரமதர் போரிஸ் ஜான்சன்

மக்களின் நலனை முன்னிறுத்தி இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கைகள் வெளிநாட்டினரின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ரஷ்யா, பாகிஸ்தானுக்கு 30 சதவீத சலுகையில் எரிபொருள் அளிப்பதாக கூறியது. இதுதொடர்பாக நான் ரஷ்யாவுக்கு சென்றேன். இது அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. நான் சென்ற சில நாட்களுக்கு பின்னர் ரஷ்யா உக்ரைனுடன் போரை ஆரம்பித்து விட்டது.

சீனாவுடன் பாகிஸ்தான் நல்லுறவில் இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. பாகிஸ்தானின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது. அமெரிக்காவின் வெளியுறவு துணை அமைச்சர் டொனால்டு லூ, மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தை கவனித்து வருகிறார். அவர்தான் இங்கு ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம். இவற்றை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் தேர்தலில் இவற்றை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Published by:Musthak
First published:

Tags: Imran khan

அடுத்த செய்தி