• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்புக்காக ஏங்கும் இம்ரான் கான்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்புக்காக ஏங்கும் இம்ரான் கான்

இம்ரான் கான் - ஜோ பைடன்

இம்ரான் கான் - ஜோ பைடன்

பாகிஸ்தானின் ‘சக்தி வாய்ந்த’ நட்பு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தன்னை தொலைபேசியில் அழைப்பார்.. அழைப்பார் என்று காத்திருந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். 

  • Share this:
    சாதாரண தொலைபேசி அழைப்புத்தானே என்று நினைக்கலாம் ஆனால் அதில் ஆயிரம் விஷயங்கள் உள்ளன. கொரோனாவை ஒழிக்கும் முகமாக பதவியேற்ற ஜோ பைடன், கவுண்டமணி ஒரு படத்தில் ‘ஹலோ நான் ரொம்ப பிசி’ என்பாரே அதுபோல் இருந்து வருகிறார்.

    ஆம்! நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தன்னைத் தொலைபேசியில் அழைப்பார் என்று இம்ரான் காத்திருந்து காத்திருந்து நொந்து நூலாகியுள்ளார்.

    நேரம் வரும் போது பைடன் அழைப்பார் என்று இம்ரான் கான் பொறுமையுடன் கூட காத்திருக்கலாம், ஆனால் பைடனுக்கு வேறு வேலைகள் இருப்பதாகவே வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றன.

    பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூதை அழைத்து ஜோ பைடனை பிரதமர் இம்ரானுடன் பேச வைப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று கூட வலியுறுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் அவரே சலித்துப் போய், “நம் பிரதமரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்னும் தொலைபேசியில் பேசாமல் இருப்பது வெட்கக்கேடு” என்று கூறியுள்ளார்.

    ஜோ பைடன் இம்ரான் கானை அழைக்காதது பாகிஸ்தானில் ஒரு தேசிய கவுரவ இழுக்காகப் பார்க்கப்பட்டு வருகிறது, எனவே இம்ரான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டிய நிலையில்தான் 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகான அமெரிக்காவின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரை தான் ஆதரவிக்கவில்லை என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கண்ட ராஜீயத் தோல்விகளுக்கு பாகிஸ்தானை குறை கூறலாமா, அமெரிக்கா தன் மேல் தப்பை வைத்துக் கொண்டு பாகிஸ்தானை குறை கூறலாமா என்றார் இம்ரான்.

    அமெரிக்க விமானப்படைக்கு தளம் அமைக்க இம்ரான் கான் அனுமதியளிக்காததன் விளைவாகவே இப்படி நடப்பதாக சிலர் கூறுகின்றனர்.

    எது எப்படி இருந்தாலும் ஜோ பைடன் இன்னும் இம்ரான் கானை தொலைபேசியில் அழைக்காதது அங்கு ஒரு கவுரவப் பிரச்னையாக பார்க்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: