அமெரிக்கா - பாகிஸ்தான் வார்த்தைப் போர்: பயங்கரவாதி பின்லேடனை தியாகி என புகழ்ந்த இம்ரான் கான்..

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இம்ரான் கான் பேசி உள்ளார்.

அமெரிக்கா - பாகிஸ்தான் வார்த்தைப் போர்: பயங்கரவாதி பின்லேடனை தியாகி என புகழ்ந்த இம்ரான் கான்..
இம்ரான் கான்
  • Share this:
பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தது.

அமெரிக்காவின் இந்த அறிக்கையை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய விதத்திற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற வேண்டிய நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. தங்கள் நாட்டில் உள்ள அபோட்டாபாத் (Abottabad) பகுதிக்குள் புகுந்து அமெரிக்கர்கள் பின்லேடனை கொன்றபோது தாங்கள் வருந்தியதாக தெரிவித்தார். இதையடுத்து பின்லேடன் தியாகியாகி விட்டார்“ என்றார்.



சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை அவருக்கு பெற்று தந்துள்ளது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading