“எந்த வகையான சூழலுக்கும் தயாராகுங்கள்” முப்படைகளுக்கு பாக். பிரதமர் உத்தரவு

ஐ.நா அமைப்பு உள்ளிட்ட சர்வதேசக்குழுக்களிடம் இந்தியாவின் ஊடுருவல் குறித்து புகார் செய்யவும் பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.

“எந்த வகையான சூழலுக்கும் தயாராகுங்கள்” முப்படைகளுக்கு பாக். பிரதமர் உத்தரவு
இம்ரான்கான் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்
  • News18
  • Last Updated: February 27, 2019, 12:38 PM IST
  • Share this:
பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இன்று அதிகாலை நுழைந்த இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ஜெய்ஷ் இயக்கத்தின் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானங்கள் நுழைந்தது உண்மைதான். ஆனால், திறந்த வெளியில் குண்டுகளை வீசி அவை சென்றுள்ளன. இதனால், எந்த பாதிப்பும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் கருத்து தெரிவித்தது.


எனினும், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் அவசரக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் ராணுவ, விமானப்படை மற்றும் கடற்படையின் தளபதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இந்தியாவின் ஊடுருவல் மற்றும் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ராணுவத்துக்கு இம்ரான் கான் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். கூட்டத்தின் முடிவில், இந்தியா பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், பாகிஸ்தான் மக்கள் மற்றும் முப்படைகள் எவ்வித சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஐநா அமைப்பு உள்ளிட்ட சர்வதேசக்குழுக்களிடம் இந்தியாவின் ஊடுருவல் குறித்து புகார் செய்யவும் பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பகுதிகளில் சர்வதேச ஊடகத்தினரை அழைத்துச் செல்ல இருந்தோம். ஆனால், வானிலை சரியாக இல்லாததால் தற்போது முடியவில்லை. அனுமதி கிடைத்ததும் அங்கு சென்று உண்மை நிலையை உலகிற்கு தெரிவிப்போம் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.

Also See..

First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading