ஹோம் /நியூஸ் /உலகம் /

என்னை கொல்ல பாகிஸ்தான் அரசும், ராணுவமும் கூட்டு சதி... இம்ரான் கான் போலிஸில் புகார்

என்னை கொல்ல பாகிஸ்தான் அரசும், ராணுவமும் கூட்டு சதி... இம்ரான் கான் போலிஸில் புகார்

காலில் குண்டு பாய்ந்த காயங்களுடன் சக்கர நாற்காலியில் இம்ரான் கான்

காலில் குண்டு பாய்ந்த காயங்களுடன் சக்கர நாற்காலியில் இம்ரான் கான்

என்னை கொல்ல பாகிஸ்தான் அரசும், ராணுவமும் கூட்டு சதி செய்துள்ளது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புகார் அளித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaIslamabadIslamabad

  பாகிஸ்தான் நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும், ராணுவத்திற்கு எதிராகவும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாடு தழுவிய பேரணியில் ஈடுபட்டு வந்தார். தனக்கு எதிராக அந்நிய நாட்டின் சதியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை கவிழ்த்ததாக கூறி மக்களிடம் நியாயம் கேட்டு இம்ரான் கான் போராட்டம், பேரணி நடத்தி வருகின்றார்.

  அதன்படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வாசிராபாதில் நவம்பர் 3ஆம் தேதி மாலை அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். அப்போது, இம்ரான் கான் மற்றும் அவர் அருகே இருந்தவர்கள் மீது கூட்டத்தில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. அதேபோல் அருகே இருந்தவர்கள் மீது குண்டு பாய்ந்தது.

  இம்ரான் கானின் இரு கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில், அவரை பாதுகாவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் இம்ரான் கான் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் இம்ரான் கானை தவிர 6 பேரும் காயமடைந்த நிலையில், அதில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அந்த வாலிபரின் பெயர் நவீத் முகமது பஷீர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஏவப்பட்ட ஆள் எனவும், தன்னை கொலை செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், உள்துறை அமைச்சர் ராணா சனவ்லா, ராணுவ மேஜர் ஜென்ரல் பைசல் நசீர் ஆகியோர் கூட்டு சதி செய்து இதை மேற்கொண்டனர் எனவும் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இவர்கள் மீது பஞ்சாப் மாகாண காவல்துறையிடம் இம்ரான் கான் புகார் அளித்துள்ளார்.

  இதையும் படிங்க: நீங்க ஆபீஸ் வர்றீங்களா ? முதல்ல வேலையில இருக்கீங்களான்னு பாருங்க - ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர்

  ஆனால், இதில் மூத்த ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய தயங்கி வருகிறது. இருப்பினும் இம்ரான் கான்னும் விடாபிடியாக இவர்கள் மீதான புகாரை திரும்பப் பெற மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காயமடைந்த இம்ரான் கான் 3 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Imran khan