ஹோம் /நியூஸ் /உலகம் /

திருமணம் முடிந்து இரண்டு வாரங்களுக்குபிறகே மனைவி ஒரு ஆண் என தெரியவந்த சோகம்!

திருமணம் முடிந்து இரண்டு வாரங்களுக்குபிறகே மனைவி ஒரு ஆண் என தெரியவந்த சோகம்!

முகமது

முகமது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உகாண்டா நாட்டின் காயுங்கா பகுதியில் இஸ்லாமிய மதபோதகருக்கு திருமணம் நடைபெற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் திருமணம் செய்துகொண்டவர் பெண் அல்ல ஆண் என்பது தெரியவந்துள்ளது.

  தெற்கு உகாண்டாவின் காயுங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது முதும்பா. அவர் இஸ்லாமிய மதபோதகராக இருந்துவருகிறார். அவர், தினசரி மசூதிக்கு செல்லும் வேளையில் ஸ்வபுல்லா நபுகீரா என்பவரைச் சந்தித்துள்ளார். இருவரும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

  இந்தநிலையில், முகமதுவின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், ‘முகமதுவின் மனைவி வீட்டிலிருந்து டி.வி, துணிகளை திருடிக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து ஓடியதைதான் பார்த்ததாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடக்கினர்.

  காவல்துறை விசாரணை குறித்து தெரிவித்த காவலர், ‘நபுகீரா காவல்நிலையத்துக்குக் கொண்டுவரப்படும்போது அவர் ஹிஜாப் அணிந்திருந்தார். அதன் பிறகு அந்நாட்டுச் சட்டப்படி, பெண் காவலர், ஆடையைக் களைந்து சோதனை செய்துள்ளனர். அப்போது, மேல்உள்ளாடையின் உள்ளே துணிகளை வைத்து மார்பு போல செய்துள்ளார். பின்னர், கீழ் பகுதியில் ஆடையைக் களைந்து சோதனை செய்யும் அவருக்கு ஆண் உறுப்பு இருப்பது தெரியவந்தது’என்று தெரிவித்துள்ளார்.

  காவல்துறை விசாரணையில் நபுகீரா என்ற பெண்ணாக நடித்தவரது பெயர் ரிச்சர்ட் துமுஷாபே என்று தெரியவந்துள்ளது. பணத்துக்காக பெண் வேடமிட்டதாக தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து தெரிவித்த நிபுகீராவை திருமணம் செய்த இஸ்லாமிய மதபோதகர் முகமது, ‘திருமணமான பிறகு இரண்டு வாரம் வரையிலும் நாங்கள் எதுவும் உடலுறவு கொள்ளவில்லை. அவருக்கு மாதவிடாய் காலம் என்று கூறியிருந்தால் நான் காத்துக்கொண்டிருந்தேன்’ என்று விளக்கமளித்துள்ளார்.

  Also see:

   

  Published by:Karthick S
  First published: