• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • குழந்தைகளை நோக்கி ஏன் ஏவுகணைகள் அனுப்பி கொலை செய்கிறீர்கள் - உடைந்து அழும் 10 வயது காசா சிறுமி

குழந்தைகளை நோக்கி ஏன் ஏவுகணைகள் அனுப்பி கொலை செய்கிறீர்கள் - உடைந்து அழும் 10 வயது காசா சிறுமி

காசா சிறுமி

காசா சிறுமி

நாம் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை அவர்கள் நம்மை வெறுப்பதாக என்னுடைய குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

  • Share this:
    காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல் மே-15-ம் தேதியில் இருந்து இதுவரை 149 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6மாத குழந்தையில் இருந்து 17 வயது சிறார் என 41 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான யுத்தத்தில் எங்க எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது என காசாவை சேர்ந்த 10-வயது சிறுமி கண்ணீர் வடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

    நாடின் அப்தெல் தைஃப் (Nadine Abdel-Taif) எனும் 10 வயது சிறுமி ‘நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன்... என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.. எனக்கு 10 வயதுதான் ஆகிறது’ என அந்த வீடியோவில் கண்ணீர் வடிக்கிறார்.

    Also Read: இ- பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? எத்தனை பேர் வாகனங்களில் செல்ல அனுமதி?

    “நான் எப்போதும் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என ஆதங்கம் தெரிவிக்கிறார். இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையால் தரைமட்டமான கட்டங்களை காண்பித்து நீங்கள் இதையெல்லாம் பாருங்கள். இதில் நான் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்புகிறார்.

     



    இதை சரிசெய்ய முடியுமா. எனக்கு 10 வயதுதான் ஆகிறது. இதை என்னால் இனி சமாளிக்க முடியாது எனக் கூறி உடைந்து அழுகிறார் அந்த சிறுமி. நான் ஒரு மருத்துவராகவோ அல்லது வேறு எதாவது ஒன்றாக விரும்பினேன் என மக்களுக்கு உதவிசெய்ய. ஆனால் என்னால் முடியாது. நான் ஒரு குழந்தை. என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. இதையெல்லாம் நான் தினமும் பார்த்து கண்ணீர் வடிக்கிறேன்.

    நாங்கள் இதற்கு என்ன செய்யப்போகிறோம். அவர்கள் நம்மை வெறுப்பதாக என்னுடைய குடும்பத்தினர் கூறுகிறார்கள். நாம் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை என்கிறார்கள். இங்கு பாருங்குள் என்னைச் சுற்றி குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் குழந்தைகள். ஏன் எங்களை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி எங்களை கொலை செய்கிறீர்கள்.” என அச்சிறுமி உடைந்து அழுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: