முகப்பு /செய்தி /உலகம் / அந்த கோகோ கோலா கம்பெனி என்ன விலைப்பா? சொல்லுங்க பேசி முடிப்போம்.. எலான் மஸ்க் கிண்டல்

அந்த கோகோ கோலா கம்பெனி என்ன விலைப்பா? சொல்லுங்க பேசி முடிப்போம்.. எலான் மஸ்க் கிண்டல்

Elon Musk

Elon Musk

இப்போது நான் மெக்டொனால்டை வாங்கப் போகிறேன். அனைத்து ஐஸ்க்ரீம் எந்திரங்களையும் பொருத்தப்போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

ட்விட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து, கோக-கோலா நிறுவனத்தை வாங்க உள்ளதாக உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 3 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் நம்பிக்கையை ட்விட்டர் பெற வேண்டும் என்றும், அரசியல்ரீதியாக நடுநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ட்விட்டரைத் தொடர்ந்து, கோக-கோலா நிறுவனத்தையும் வாங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், கோக-கோலாவில் மீண்டும் கோகைனை கலக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவானது  லட்சக்கணக்காணோரால் மீண்டும் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 1800-களில் அறிமுகப்படுத்தப்பட்ட கோக-கோலா-வில் கோகைன் கலக்கப்பட்டது. பின்னர் 1900-களில் கோகைன் கலப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், எலான் மஸ்க்-கின் அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் எலான் மஸ்க் தான் முன்பு பதிவிட்ட ட்விட்டரின் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். அதில் “இப்போது நான் மெக்டொனால்டை வாங்கப் போகிறேன். அனைத்து ஐஸ்க்ரீம் எந்திரங்களையும் பொருத்தப்போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதற்கு அவரே பதில் அளித்து “ என்னால் வியப்புக்குரிய விஷயங்களை எல்லாம் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்பதால், அவரை நிர்வாகக் குழுவில் சேர்க்க முயன்றபோது அதில் சேர்வதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கியுள்ள எலான் மஸ்க் அடுத்ததாக கோ-கோலா நிறுவனத்தை வாங்கவும் திட்டமிட்டு அதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளது பொது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Elon Musk