சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தியது மலேசியா

news18
Updated: April 15, 2018, 6:21 PM IST
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தியது மலேசியா
நாடு கடத்தப்படும் சட்டவிரோதமாக குடியேறிகள்
news18
Updated: April 15, 2018, 6:21 PM IST
மலேசிய நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாடுகளைச் சேர்ந்த 336 பேர் நாடு கடத்தப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானோர் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (ஷாபா மாநிலம்) இயக்குநர் ரோட்ஸி சாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஷாபா மாநிலத்திலுள்ள தற்காலிக தடுப்பு முகாமிலிருந்து பிலிப்பைன்ஸை சேர்ந்த 289 பேர் 4 நாட்களுக்கு முன் படகு மூலமாக அவர்களுடைய நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அதேபோல், இந்தோனேசியாவைச் சேர்ந்த 47 பேர் படகு மூலமாக இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஷாபா மாநிலத்தைப் பொறுத்தவரையில் 4 வெவ்வேறு தற்காலிக தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக குடியேறிய 4,827 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வறுமையின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என ரோட்ஸி சாத் தெரிவித்துள்ளார்.

பின்னணி: பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் மூலமாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர்.

இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள், இவர்களை எந்தவித
ஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர்.
Loading...
மேலும், அந்தக் குறைந்த ஊதியத்தைக்கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்களும் நிகழ்கின்றன. சுமார் 32 மில்லியன் மக்கள்தொகையினைக் கொண்டுள்ள மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இதே 2 மில்லியன் அளவிலான பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறிய தொழிலாளர்களும் உள்ளனர் என கடந்த ஆண்டு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்தன.

இவ்வாறு கைது செய்யப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அஞ்சியதுபோலவே மலேசியாவின் முக்கிய மாநிலமான ஷாபாவில் பலர் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
First published: April 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்