• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆபாச உடை அணிந்து ஆண்களின் உணர்ச்சிகளைத் தூண்டாதீர்கள் - பாலியல் வன்கொடுமை குறித்து பெண்களுக்கு எதிராக இம்ரான் கான் பேச்சு

ஆபாச உடை அணிந்து ஆண்களின் உணர்ச்சிகளைத் தூண்டாதீர்கள் - பாலியல் வன்கொடுமை குறித்து பெண்களுக்கு எதிராக இம்ரான் கான் பேச்சு

 இம்ரான் கான்

இம்ரான் கான்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டுமென்றால் பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிந்து ஆண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒருமுறை பெண்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

  • Share this:
    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டுமென்றால் பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிந்து ஆண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒருமுறை பெண்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம்தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் ஆபாசமாக உடையணிவதே, பர்தா அணியாததே என்று கருத்து கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

    மீண்டும் ஒருமுறை அவர் ஹெச்.பி.ஓ. சேனலில் அளித்த நேர்காணலில் இது தொடர்பாக கூறும்போது, “நான் பர்தா என்ற கருத்தாக்கத்தைப் பற்றி பேசினேன். உணர்ச்சிகளைத் தூண்டுவதைத் தவிர்க்க வேண்டும். இங்கு டிஸ்கோ கிளப்கள் கிடையாது, இரவு கேளிக்கை விடுதிகள் கிடையாது. இது முற்றிலும் வித்தியாசமான ஒரு சமூகம். வித்தியாசமான வாழ்க்கை முறை.

    Also Read: Delta Virus : டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலன் அளிக்கவில்லை -உலக சுகாதார நிறுவனம்

    எனவே ஒரு அளவுக்கு மேல் ஆண்களின் உணர்ச்சிகளை பெண்கள் தூண்டினால் இளைய ஆண் சமுதாயம் எங்கு போய் ஆசையைத் தீர்த்துக் கொள்ளும்? எனவே அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களைத் தூண்டினால் அது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    பெண்கள் ஆபாசமாக உடை அணிந்தால் ஆண்கள் நிச்சயம் சபலமடைவார்கள், ரோபோக்கள் மட்டுமே சபலமடையாது, எனவே அரைகுறை ஆடைகள் அணிந்தால் ஆண்கள் சபலமடைவது என்பது இயற்கையானது.

    மீண்டும் எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்த விஷயமாகும் இது. அரைகுறை ஆடைகள், ஆபாசங்களை பார்த்திராத சமூகமாக இருந்தால் இவை நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தவே செய்யும்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இம்ரானின் இந்தப் பேச்சுக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் செய்தித் தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் கடுமையாக விமர்சனம் புரிந்துள்ளார், “நோய்வாய்ப்பட்ட மனநிலை படைத்தவர் இம்ரான் கான், பெண் விரோதி” என்று கடுமையாகத் தூக்கினார்.

    மேலும் அவர் கூறும்போது, “பெண்கள் அணியும் ஆடைத் தெரிவினால் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதில்லை. இத்தகைய கொடூரமான மன நிலை படைத்த ஆண்களினால்தான் குற்றம் நிகழ்கிறது” என்றார்.

    அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி பாகிஸ்தானில் நாளொன்றுக்கு 11 கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் பதிவாகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் 22,000 பாலியல் புகார்கள் பதிவாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: