அதிபராக தேர்வானால் இந்தியாவுடன் உறவு வலுப்படுத்தப்படும் - ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடேன் உறுதி!

தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முக்கியத்தும் அளிப்பேன் என்று அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் உறுதிபடக் கூறியுள்ளார்.

அதிபராக தேர்வானால் இந்தியாவுடன் உறவு வலுப்படுத்தப்படும் - ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடேன் உறுதி!
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன்
  • Share this:
அமெரிக்காவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முந்தைய ஜனநாயக கட்சி ஆட்சியில், இந்தியாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தான் முக்கிய பங்கேற்றியதற்காக பெருமைப்படுவதாகத் தெரிவித்தார்.

இரு நாடுகளிடையேயான உறவு இயற்கையாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிராந்திய பாதுகாப்பிற்கு இந்தியாவுடனான உறவு அவசியம் என்றும் தெரிவித்தார்.Also read... சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த விவகாரம் - அமெரிக்கா ஆதரவு

வரும் தேர்தலில் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஜோ பிடேன் திட்டவட்டமாகக் கூறினார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading