இட்லிகள், ஷூக்கள், வெற்றி உரைகள்... கமலா ஹாரிஸ் இந்தியாவில் தலைப்பு செய்தியாக வலம் வந்த தருணங்கள்..

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் பொது நிகழ்ச்சிகளிலும், அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும்போது எளிமையாகவும், அதே சமயத்தில் நாகரீகமாகவும் அணியும் உடைகள் ஃபேஷன் விமா்சகா்கள், ஆடை வடிவமைப்பாளா்கள் மற்றும் அமெரிக்கப் பெண்களிடையே பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிய வரலாற்று சாதனையுடன், அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடன் (Joe Biden) பதவியேற்றார். அதேபோல அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக, இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் (Kamala Harris) பதியேற்றார். கமலா அமெரிக்காவின் முதல் பெண் துணைத் தலைவர் என்ற பெருமையை வகித்துள்ளார். 

சமீபத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தில் வன்முறை நடந்ததால், பதவியேற்பு விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அமெரிக்க வரலாற்றில் இல்லாத வகையில், பதவியில் இருந்து விலகிய அதிபர் ட்ரம்ப், புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமை இவருக்கு இருக்கிறது என்றாலும், இவர் பல துறைகளில் பணியாற்றிய முதல் பெண் என்ற பெருமையயும் ஏற்கனவே பெற்றுள்ளார். 

56 வயதான கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் செனட்டில் உள்ள மூன்று ஆசிய அமெரிக்கர்களில் ஒருவர் ஆவார். மேலும் அவர் செனட்டர் அறையில் பணியாற்றிய முதல் இந்திய-அமெரிக்கரும் ஆவார். அதேபோல, அவர் ஒரு மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமை இவருக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது. 

மேலும், துணை அதிபர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டதில் இருந்து கமலா ஹாரிஸுக்கு இந்திய மக்களிடம் பெரும் வரவேற்பு  கிடைத்து வந்தது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் ஆற்றிய உரைகள் பெரிதும் பேசப்பட்டது. தனது பெயரை தவறாக உச்சரித்தவர்களை திருத்துவதில் இருந்து, தனக்கு பிடித்த சமையல் குறிப்புகளை ஆன்லைனில் பகிர்வது வரை, கமலா ஹாரிஸ் கடந்த சில மாதங்களாக இந்திய இணையத்தை ஆட்சி செய்து வருகிறார். அந்த வகையில், கமலா ஹாரிஸ் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இந்திய ஊடகங்களில் வைரலாக பேசப்பட்ட தருணங்கள் சிலவற்றை பாப்போம்.

கமலா ஹாரிஸுக்கு விருப்பமான உணவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தில்,  ஹாரிஸ் தனக்கு பிடித்த இந்திய உணவுகள் பற்றி மனம் திறந்து பேசினார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், இட்லி - சாம்பார் மற்றும் அதனுடன் ஏதேனும் ஒருவகை டிக்கா ஆகியவை இந்திய உணவு வகைகளில் இருந்து தனக்கு பிடித்தவை என்று கூறியிருந்தார்.

கமலா ஹாரிஸின் வசதியான காலணிகள்

2020ம் ஆண்டில், ஹாரிஸ் அமெரிக்கத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது, அவர் அடிக்கடி உபெர் கூல் கன்வர்ஸ் ஷூக்களில் காணப்பட்டார். அது விரைவில் வைரலாகியது. நேர்காணல் ஒன்றில் தனது ஷூ தேர்வு குறித்து பேசிய கமலா ஹாரிஸ், "எனது காலணிகளால் விமான நிலையங்களில் ஓடுகிறேன். சக் டெய்லர் தயாரிப்பின் முழு தொகுப்பும் என்னிடம் உள்ளது" என்றார். சக் டெய்லர்ஸ் ஷூக்கள் கூடைப்பந்து வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு வீரராக இருந்து விற்பனையாளராக மாறிய டெய்லர் தயாரிப்பு, ஹாரிஸ்க்கு தனித்த அடையாளத்தை பெற்று தந்துள்ளது. ஷூக்களுக்கும், கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து கொலாப் புத்தகத்தின் ஆசிரியர் எலிசபெத் செம்மெல்ஹாக் ஒரு பேட்டியில், "கமலா ஹாரிஸ் அணியும் காலணிகள் அவர் ஒரு செயலாற்றல்மிக்க பெண் என்பதை பரிந்துரைக்கின்றன" எனக் கூறியுள்ளார்.

கமலா ஹாரிஸின் வாக்அவுட் பாடல்

அமெரிக்காவின் துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், கமலா ஹாரிஸ் ஒரு வாக்அவுட் பாடலைத் தேர்ந்தெடுத்தார். அது அவருக்காகவே உருவாக்கப்பட்டது போன்று இருந்தது. மேரி ஜே. பிளிஜின் பாடிய  "ஒர்க் தட்" என்ற பாடலை இசைத்தபடி, கமலா ஹாரிஸ் ஜனநாயக தேசிய மாநாட்டின் மேடையில் நடந்து சென்றது பெரிதும் வைரலானது. அமெரிக்காவில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் துணை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் வண்ணப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

ஹாரிஸின் வெற்றி உரை

அமெரிக்காவின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் கமலா ஹாரிஸ் நிகழ்த்திய வெற்றி உரை இந்தியா முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. தனது உரையில் பேசிய கமலா ஹாரிஸ், "இந்த வெற்றி தருணத்தில் நான் என் தாயான ஷியாமளா கோபாலன் ஹாரிஸை நினைவுகூர விரும்புகிறேன். அவர் தனது 19-வது வயதில் அமெரிக்காவில் குடியேறியபோது இது போன்ற ஒரு வெற்றி தருணத்தை எட்டுவோம் என்று எண்ணியிருக்க மாட்டார். அதேபோல, துணை அதிபராக பதிவியேற்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றாலும், கடைசி பெண்ணாக இருக்க போவதில்லை" என்று கூறினார். அவரது பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அவரது வெற்றியை தமிழகத்தின் மன்னார்குடி கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவர் உடுத்தும் ஆடைகள்

அதே நேரத்தில், கமலா ஹாரிஸ் பொது நிகழ்ச்சிகளிலும், அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும்போது எளிமையாகவும், அதே சமயத்தில் நாகரீகமாகவும் அணியும் உடைகள் ஃபேஷன் விமா்சகா்கள், ஆடை வடிவமைப்பாளா்கள் மற்றும் அமெரிக்கப் பெண்களிடையே பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அதிலும், அமெரிக்க துணை அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த கமலா ஹாரிஸ் அணிந்திருந்த ஊதா நிற கோட் ஆடை அமெரிக்கா முழுக்க அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Also read... அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ் - கொண்டாடும் தமிழக மக்கள்!

அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு 19ம் நூற்றாண்டில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம் பல தசாப்த கால போராட்டமாகும். அந்த உரிமையை வெல்ல கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் மகளிர் ஆர்வலர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் போராடினர். அந்த போராட்டத்தின் தீம் வண்ணமாக ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகியவை இருந்தது. ஊதா, வெள்ளை மற்றும் கோல்டன் வண்ணங்களில் பதாகைகளை ஏந்தி போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றனர். அதனை பிரதிபலிக்கும் விதமாகவே பதிவியேற்பு விழாவில் அணிந்த ஆடை இருந்தது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: