ஹோம் /நியூஸ் /உலகம் /

நிரம்பி வழியும் ஐசியூ.. மருத்துவமனைகளில் கூட்டம்.. சீனாவை மிரட்டும் கொரோனா.!

நிரம்பி வழியும் ஐசியூ.. மருத்துவமனைகளில் கூட்டம்.. சீனாவை மிரட்டும் கொரோனா.!

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகள்

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகள்

குறிப்பாக ஐசியூவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவது உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

உலக அளவில் கொரோனா பரவல் மெல்ல குறையத் தொடங்கிய நிலையில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தின. ஆனால் கொரோனா முற்றிலும் ஒழியும் நோக்கில் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடித்துவந்தது. இதனால் பொருளாதார ரீதியிலான பாதிப்பு ஏற்படுவதோடு மக்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து சில நாட்களுக்கு முன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியது.

இந்த நிலையில் உலக அளவில் பிஎஃப் - 7 என்ற புதிய கொரோனா வகை பரவல் அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் புதிய வகை கொரோனா அதிதீவிரமாக பரவிவருகிறது. இதனையடுத்து கொரோனா அறிகுறிகளுடன் வரும் மக்களால் மருத்துவமனைகளும் மருத்துவமுகாம்களும் நிரம்பி வழிந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக செஜியாங் மாகாணத்தில் தினமும் 10 லட்சம் பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும் புத்தாண்டுக்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சுவதாகவும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

மற்ற மாகாணங்களிலும் இதே நிலைதான். இந்த வாரத்தில் சீனாவில் 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஐசியூவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். பல மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனையின் ஐசியு நிரம்பிவிட்டதாக அறிவித்துவருகின்றன. சீனாவில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவது உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

இந்த நிலையில் சீனாவின் சுகாதாரத்துறை புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தினசரி கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளில் தங்களின் பிம்பம் சேதப்படுவதை தவிர்க்க இந்த முடிவை சீனா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Corona, Covid-19, Omicron BF 7 Variant