Home /News /international /

சீனாவில் ஐஸ்கீரிம் மூலம் பரவிய கொரோனா - மக்கள் அதிர்ச்சி

சீனாவில் ஐஸ்கீரிம் மூலம் பரவிய கொரோனா - மக்கள் அதிர்ச்சி

ஐஸ் கீரிம் (மாதிரி படம்)

ஐஸ் கீரிம் (மாதிரி படம்)

பிரிட்டனில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானில் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவியிருக்கும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுமார் 50 நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. துபாயில் சுகாதாரப் பணியாளர்களுக்கு 2வது கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. முதல் டோஸ் போடப்பட்டு 21 நாட்கள் நிறைவடைந்த நிலையில், துபாய் நகரில் அல் சபா, ஜபில், அல் மிசர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மையங்களிலும், மருத்துவமனைகளிலும் 2வது டோஸ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நெதர்லாந்து நாட்டில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட 100க்கும் மேற்பட்டோருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. நார்வேயில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோருக்கு ஒவ்வாமை, தலைவலி, சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    பிரிட்டனில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வருவோருக்கு மட்டுமே நாட்டிற்கு அனுமதி என அறிவித்துள்ள பிரிட்டன், வெளிநாடுகளில் இருந்து வருவது யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்றும் திட்டவடமாக கூறியுள்ளது.

    இதேபோல், ஜப்பானிலும் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனையை அதிகரிக்க முடிவு செய்துள்ள அந்நாட்டு அரசு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்தால் அவர்களுக்கு அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

    சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டியன்ஜின் என்ற இடத்தில் இயங்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா தொற்றை கண்டறிந்த அதிகாரிகள், அந்த ஆலையை மூடி சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த பணியாளர்களை தனிமைபடுத்தி, கண்காணித்து வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona virus

    அடுத்த செய்தி