ஹோம் /நியூஸ் /உலகம் /

சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களுக்கு ஐஸ்கிரீம்!

சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களுக்கு ஐஸ்கிரீம்!

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

2,170 கிலோ எடையுள்ள சரக்குகளை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களுக்கு ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் அவற்றை எடுத்துச் சென்றது.

பூமிக்கு அப்பால் வின்வெளியில் அமைக்கப்பட்டுள்ளது சர்வதேச விண்வெளி ஆய்வு மையம். அமெரிக்கா, ரஷ்யா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவியுள்ளன.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இந்த விண்வெளி மையத்தில் சுழற்சி முறையில் தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுகள் ஆகியவை சரக்கு விண்கலங்கள் மூலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை ஒன்றிணைந்து 2,170 கிலோ எடையுள்ள சரக்குகளை பால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்பின.

அதில், ஆய்வுப் பணிகளுக்கு தேவையான கருவிகள், விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியுள்ள 7 விண்வெளி வீரர்களுக்கு தேவையான, ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, மனித உயரம் கொண்ட ரோபோ உள்ளிட்டவை அந்த சரக்கு விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Must Read : காபுல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.3000, சாப்பாடு ரூ.7,500க்கு விற்பனை - பரிதவிக்கும் ஆப்கன் மக்கள்!

அதில் குறிப்பாக, எறும்பு, எலுமிச்சை பழம், அவகோடா பழம், சில செடிகளும் அனுப்பப்பட்டுள்ளன. சில செடிகளுக்கு தேவையான விதைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த சரக்கு விண்கலம் இன்று விண்வெளி ஆய்வு மையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ice cream, Indian space research organisation