• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நீச்சல் குளம் கட்டும்போது 14,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கிடைத்ததால் அதிர்ச்சி!

நீச்சல் குளம் கட்டும்போது 14,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கிடைத்ததால் அதிர்ச்சி!

14,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள்

14,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள்

நெவாடா அறிவியல் மைய ஆராய்ச்சி இயக்குனர் ஜோசுவா போண்டே, இந்த எலும்புகள் சுமார் 6,000 முதல் 14,000 ஆண்டுகள் வரை பழமையானவை என்றும் அவை குதிரை அல்லது குதிரை போன்ற பெரிய பாலூட்டிகளின் எலும்புகளாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Share this:
பூமியின் மிக சமீபத்திய பனி யுகத்திற்கு முந்தைய கால உயிரினத்தின் எலும்பு தொகுப்புகள் லாஸ் ஏஞ்செல்ஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸில் உள்ள ஒரு தம்பதியினர், தங்களது வீட்டின் கொல்லைப்புறத்தில் நீச்சல் குளத்தை கட்ட திட்டமிட்டிருந்தனர். அதற்காக குழிதோண்டும் போது இந்த எலும்புக்கூடுகளை கட்டுமான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வாஷிங்டன் மாநிலத்தில் இருந்து நெவாடாவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு குடிபெயர்ந்த மாட் பெர்கின்ஸ் மற்றும் அவரது கணவர், தங்கள் வீட்டில் சில எலும்புகளை கண்டதாக கூறி அதனை ஆய்வு செய்ய அப்பகுதி போலீஸ் மற்றும் குற்ற காட்சி புலனாய்வாளர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து, பெர்கின்ஸ் கே.டி.என்.வி-டிவியிடம் கூறியதாவது, எங்கள் வீட்டின் பின்புறத்தில் நீச்சல் குளம் கட்ட முதலில் திட்டமிட்டிருந்தோம். அதற்காக கட்டுமான பணியாளர்கள் குளத்தை வெட்டும் பகுதியை பார்வையிட வந்தனர்.

பிறகு குளத்தை வெட்டும் போது தான் சில எலும்புகூடுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து நாங்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தோம் என்று கூறியுள்ளார். நீச்சல் குளம் கட்டுபவர்கள் எலும்புகளை தரையில் இருந்து சுமார் ஐந்து அடி (1.5 மீட்டர்) ஆழத்திற்கு கீழே கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் புலனாய்வாளர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர், அந்த எலும்புகள் மனிதனுடையது அல்ல என்றும், சட்ட அமலாக்க கவலைகள் எதுவும் எழுப்பப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து நெவாடா அறிவியல் மைய ஆராய்ச்சி இயக்குனர் ஜோசுவா போண்டே கூறியதாவது, இந்த எலும்புகள் சுமார் 6,000 முதல் 14,000 ஆண்டுகள் வரை பழமையானவை என்றும் அவை குதிரை அல்லது குதிரை போன்ற பெரிய பாலூட்டிகளின் எலும்புகளாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 14,000 ஆண்டுகளுக்கு முன்பு வறண்ட மொஹவே பாலைவனத்தில் இந்த உயிரினங்கள் வாழ்ந்த பகுதி இயற்கை நீரூற்றுகளால் உணவளிக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு நீர்ப்பாசன இடமாக விளங்கியது என்று போண்டே மேலும் கூறியுள்ளார.

இந்த கொல்லைப்புற கண்டுபிடிப்பு துலே ஸ்பிரிங்ஸ் புதைபடிவ படுக்கைகள் தேசிய நினைவுச்சின்னத்தின் அருகே கிடைத்துள்ளதாகவும், அப்பகுதியில் ஏற்கனவே மாமத் போன்ற அரிய புதைபடிவங்கள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

எனவே, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கொல்லைப்புறத்தில் ஏதேனும் தேவைக்காக தோண்டும்போது, இது போன்ற எலும்புகளையோ அல்லது வேறு எதையாவது கண்டால் அதிர்ச்சியடைய கூடாது என்று போண்டே கூறினார். மேலும் இதுபோன்று கண்டுபிடிக்கப்படும் புதைபடிவங்கள் அப்பகுதியின் உரிமையாளர்களுக்கு சொந்தமானவை என்று அமெரிக்க சட்டம் கூறுவதாகவும் அவர் மேலும் விளக்கியுள்ளார். இந்த புதைபடிவத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்தும் புலனாய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: