ஹோம் /நியூஸ் /உலகம் /

அவளுக்கு 12 வயது... எனக்கு 30 வயது... சர்ச்சையாக பேசி சிக்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அவளுக்கு 12 வயது... எனக்கு 30 வயது... சர்ச்சையாக பேசி சிக்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஜோ பைடனுக்கு மனநோய் அதிகரித்துவிட்டதாக அவரின் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்துள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Inter, IndiaWashingtonWashington

  ஆசிரியர் சங்க விழாவில் பங்கேற்ற போது அங்கிருந்த பெண் ஒருவர் குறித்து பேசி சலசலப்பில் சிக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அந்நாட்டின் மிகப்பெரிய ஆசிரியர் சங்கமான தேசிய கல்வி சங்க நிகழ்வில் பங்கேற்று பேசினார். பார்வையாளர்கள் கூடிய இருந்த அரங்கில் பருவ நிலை மாற்றம் குறித்து உரையாற்றி கொண்டிருந்த ஜோ பைடன், திடீரென்று பேச்சை நிறுத்தி அங்கிருந்த பெண்ணை சுட்டிக்காட்டினார். அந்த பெண்ணிடம் நீங்கள் எனக்கு ஹாய் சொல்லலாம் என்றார்.

  பின்னர் அந்த பெண்ணை குறித்து அங்கு திரண்டிருந்த பார்வையாளர்களிடம், " நீண்ட காலம் முன்னரே இந்த பெண்ணை தனக்கு தெரியும், எனக்கு அப்போது வயது 30 அந்த பெண்ணுக்கு வயது 12. ஆனாலும், பல மோசமான காரியங்களை நான் செய்துமுடிக்க அந்த பெண் எனக்கு உதவியாக இருந்தார்" என்றார்.

  இதையும் படிங்க: பொம்மை வீடு கட்டி கொடுத்த தந்தை..குதுகலமாக விளையாடும் குழந்தையின் க்யூட் வீடியோ வைரல்

  ஜோ பைடன் இவ்வாறு பேசியதும் அரங்கில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்து சிரித்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து அவர் வேறு எந்த தகவலும் அவர் தெரிவிக்கவில்லை. அதேவேளை ஜோ பைடனின் பேசிய இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியுள்ளது.

  ஜோ பைடன் இவ்வாறு கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் விமர்சித்து வருகின்றனர். ஜோ பைடன் ஒரு உளறு வாய் என்பதை தொடர்து நிரூபிப்பதாக காணொலி குறித்து ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் இப்படி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வதா, ஜோ பைடனுக்கு மனநோய் அதிகரித்து விட்டது என பல விதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் குவிந்து வருகின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Joe biden, US President, Viral Video