Home /News /international /

ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல்: உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை அழித்த ரஷ்ய ராணுவம்!

ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல்: உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை அழித்த ரஷ்ய ராணுவம்!

Hypersonic missile | உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.

Hypersonic missile | உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.

Hypersonic missile | உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.

    உக்ரைன் மீது ரஷ்யா முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. MiG-31 போர் விமானங்கள் மூலம் செலுத்தப்படும் கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் படைத்தவை.

    ரஷ்ய ராணுவத்துடன் கூட்டு வைத்துள்ள உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், மரியுபோல் நகருக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் எந்நேரமும் அந்நகரை ரஷ்யா கைப்பற்றி விடும் என தெரிகிறது. இது மட்டுமல்லாமல் உக்ரைனை கருங்கடலுடன் இணைக்கும் அசோவ் கடல் பகுதிக்கு தற்காலிகமாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    Also read... ‘ஒரே ஒரு போர்’, 10 வினாடிகளில் முடிந்துவிடும் – ரஷ்ய அதிபர் புடினுக்கு நேரடி சவால் விடுத்த எலான் மஸ்க்s

    தலைநகர் கீவ் மற்றும் மைகோலைவ் நகரங்களை சுற்றி வளைக்கும் ரஷ்யாவின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது. எனினும் கார்கிவ், செர்னிஹிவ், சுமி மற்றும் மரியுபோல் நகரங்களில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    சீன அதிபர் ஜி ஜின்பிங்-குடன் காணொலி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் எச்சரித்துள்ளார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் போரை சீனா விரும்பவில்லை என்றும் உலக நாடுகள் எந்தப் பிரச்சினையையும் நேரில் சந்தித்துப் பேசித் தீர்க்க வேண்டும். என்றும் அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நீதியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் இல்லை என்றால், பல தலைமுறைகளுக்கு ரஷ்யா மீண்டு வர முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.

    உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை போர் மூலம் ரஷ்யா இணைத்துக் கொண்டதன் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லுஷ்னிகி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை பாராட்டினார். இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற கூட்டத்தில், ரஷ்ய தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி