மனைவியின் கள்ளக்காதலனைக் கடத்திச் சென்று காதையும் மூக்கையும் அறுத்த கணவர்

மாதிரிப்படம்.

மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்தவரின் காதையும் மூக்கையும் கணவர் அறுத்துள்ளார்.

 • Share this:
  பாகிஸ்தானில் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த நபரின் காதையும் மூக்கையும் கணவர் அறுத்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பாகிஸ்தான் முக்கிய நகரான லாகூரிலிருந்து 375 கி.மீ தொலைவில் உள்ளது பஞ்சாப் மாகாணத்தின் முசாஃபர்கர் கிராமம். அந்த ஊரில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறை, ‘அப்துல் கயாம் என்பவருக்கு அவரது மனைவியுடன் முகம்மது அக்ரம் என்பவர் கள்ளத்தொடரில் இருப்பதாக சந்தேகம் இருந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அக்ரம் அவரது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவரை அப்துல் கயாம் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வழிமறித்துள்ளார்.

  அவரை, ஆளில்லாத பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்குவைத்து அக்ரமின் காது மற்றும் மூக்கை அறுத்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். அதனையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த அக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக அப்துல் கயாம் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்துல் கயாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பெண்களும், 800 ஆண்டுகளும் ஆண்டுக்கு ஆணவக் கொலையின் காரணமாக கொலை செய்யப்படுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
  Published by:Karthick S
  First published: