ஹாங்காங் நாட்டை சேர்ந்த பிரபல மாடல் அழகி அபி சோய்(28). இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். மேலும், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த 2023ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். கடந்த வாரம் எல்அபிசியல் மொனாக்கோ என்ற பேஷன் செய்தி இதழின் டிஜிட்டல் முகப்பு பக்கத்தில் இவரது புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இதனிடையே, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். சில நாட்களுக்கு முன் அபி சோய் திடீரென மாயமானார். புகாரின்பேரில் போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாய்போ மாவட்டத்தில் உள்ள இடத்தில் அபி சோயின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அபி சோயின் 2 கால்களும் துண்டாக வெட்டப்பட்டு அங்கிருந்த ஃப்ரிட்ஜில் இருந்தன. மேலும், தலை, உடல் மற்றும் கைகளை போலீசார் அருகில் தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. போலீசாரின் விசாரணையில் அவரது கணவர் தான் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடிக்க 100 போலீசார் வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும், ஆளில்லா விமானம் மற்றும் மோப்ப நாய்களும் இந்த தேடுதல் வேட்டையில் பயன்படுத்தப்பட்டன. இதனிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அவர் வேறொரு தீவுக்கு தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து, போலீசார் அபி சோயின் கணவர், அவரது சகோதரர் மற்றும் அபி சோயின் மாமனார் உள்ளிட்டோரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும், மீதமுள்ள அபி சோயின் உடல் பாகங்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. முன்னதாக அபி சோயின் கணவர் தப்பி செல்லும்போது அவரிடம் ரூ.52.81 கோடி ரொக்கம் மற்றும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பல்வேறு ஆடம்பர ரக வாட்சுகளையும் போலீசார் கைப்பற்றினர். சொத்து தகராறுக்காக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.