ஹோம் /நியூஸ் /உலகம் /

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. வீதிகளில் சுற்றும் சுறாக்கள்... புளோரிடாவை புரட்டி போட்ட புயல்

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. வீதிகளில் சுற்றும் சுறாக்கள்... புளோரிடாவை புரட்டி போட்ட புயல்

புளோரிடாவை புரட்டிப்போட்ட பலத்த இயான் புயல்

புளோரிடாவை புரட்டிப்போட்ட பலத்த இயான் புயல்

இயான் புயல் தாக்கியதால் புளோரிடா பகுதியே புரட்டி போடப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தினால் பல பேரின் வீடுகள் சூறாவளிக் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளது. மீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, IndiaFloridaFloridaFlorida

  அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று மணிக்கு 241 கி.மீ வேகத்தில் தாக்கிய இயான் புயலால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயான் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளும் இறந்தவர்கள் எண்ணிக்கையும் முழுமையாகத் தெரியாத நிலையில் வீடுகளின் இடிபாடு நடுவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டியிருக்கிறது.

  புளோரிடாவை தாக்கிய புயலால் மணிக்கு 241 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்தது. மேலும் புயலின் தாக்கத்தினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது.

  தேசிய சூறாவளி மையம் இயான் புயலை மிகவும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ளது. புயலின் காரணத்தினால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணமே இருளில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ளத்தில் மற்றும் இடிபாடுகளுக்குச் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  4000-க்கும் மேல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இயான் புயல் தாக்கிய பகுதிகளில் உள்ள மருத்துவமனையிலிருந்த நோயாளிகளைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாறியுள்ளனர். 2.6 மில்லியன் வீடுகள் மற்றும் தொழில் செய்யும் பகுதிகள் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் சுறா போன்ற கடல்வாழ் உயிரினங்கள் வீதியில் சுற்றி திரியும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

  பேரழிவை ஏற்படுத்திய இந்த புயலால் புளோரிடா நிலைகுலைந்து உள்ளது. இந்த நிலையில் இந்த அழிவு அமெரிக்காவிற்கு மிகவும் துயரமான சம்பவம் என்றும் இது புளோரிடாவில் இரு வரை இல்லாத அளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  Also Read : உக்ரைனில் இரு பிராந்தியங்களை சுதந்திர நாடாக அறிவித்த ரஷ்யா!

  அமெரிக்காவின் ராணுவமும் போரிடர்கால மீட்புப் படையினரும் இணைந்து மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது இயான் புயல் புளோரிடாவில் இருந்து தெற்கு கலிபோர்னியா நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Cyclone, Florida, Heavy rain